惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
量子位
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
Google DeepMind News
Google DeepMind News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
G
Google Developers Blog
U
Unit 42
D
DataBreaches.Net
博客园 - Franky
D
Docker
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? - மேலாளர் மறுப்பு
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான நிலையில், அவர் அப்படி எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு இன்று காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தார். சிறிது நேரம் காத்திருந்த அவர், வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் நபராக வாக்களித்தார்.

அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே குவிந்தனர். கூட்ட நெரிசல் அதிகரித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த அஜித், காரில் ஏறிச் சென்றார்.

இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதன் தொடர்ச்சியாக, ‘மாற்றம் தேவையில்லை என அஜித் பதில் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், ‘அஜித் நல்ல கருத்துதானே கூறியுள்ளார். அவருக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.

இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கத்தில், ‘வாக்களித்துவிட்டு வந்த அஜித்குமார் எந்தவிதமான அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை. மாற்றம் தேவையில்லை என்பது போன்ற பதிலையும் அவர் கூறவில்லை. செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அஜித் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.