惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
IT之家
IT之家
小众软件
小众软件
M
MIT News - Artificial intelligence
博客园 - 聂微东
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
A
About on SuperTechFans
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
C
Check Point Blog
云风的 BLOG
云风的 BLOG
腾讯CDC
H
Help Net Security
Y
Y Combinator Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்த பழனி...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

புதுச்சேரி: அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிசாமி புதுச்சேரியில் இருந்து செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டார். அரசியல் சூழலுக்கு ஏற்ப முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு எம்எல்ஏக்கள் அளித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்கியுள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை இரவு வந்தார். எடப்பாடி பழனிசாமி இரவு 7 மணிக்கு வந்து 8.15 மணிக்கு புறப்பட்டார். அவர் ஒரு மணி நேரம் ரிசார்ட்டில் இருந்தார். 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தி விட்டு சென்றதாகவும், அவர்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் அவருக்கு இந்தக் கூட்டம் அளித்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி இம்முறை சந்திப்பதை தவிர்த்து புறப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகனிடம் கேட்டதற்கு, “புதிய எம்எல்ஏக்களிடம் பேசிவிட்டு எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

விஜய்க்கு ஆதரவா என கேட்கிறீர்கள். நாங்கள் ‘யார் விஜய்?’ என கேட்கிறோம். அத்துடன் திமுகவுடன் கூட்டணியா என்பதை திமுக தலைவர் ஸ்டாலினிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். சினிமா நடிகர் விஜய் உடன் அதிமுகவினருக்கு ஒட்டும் உறவும் இல்லை. இங்கு ஓய்வு எடுக்கதான் எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். சி.வி.சண்முகம் உட்பட சிலர் வேலைக்காக சென்றுள்ளனர்.

பதவி வெறிக்காக காங்கிரஸார் விஜய் கட்சிக்கு ஆதரவு தருகின்றனர். இது சந்தர்ப்பவாத ஆதரவு. திமுக ஆதரவுடன்தான் காங்கிரஸார் வென்றுள்ளனர். அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸார் பதவி வெறியால் தமிழக அரசியலை புரட்டி போடும் சூழலை உருவாக்கியதால், அதை தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எம்எல்ஏக்கள் எத்தனை நாட்கள் இருப்பார்கள் என கேட்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமையும் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.