惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园_首页
C
Check Point Blog
小众软件
小众软件
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News
D
Docker
罗磊的独立博客
B
Blog RSS Feed
The Cloudflare Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
雷峰网
雷峰网
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காங்கிரஸ் தொண்டர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்: கிர...
2026-05-22 · via hindutamil

காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்

Updated on

1 min read

சென்னை: காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 2 பேர் அமைச்​சர்​களாக பதவி​யேற்ற நிலை​யில் கட்​சி​யின் தொண்​டர்​களுக்கு இது வரலாற்று சிறப்​புமிக்க நாள் என காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ்​நாட்​டிலுள்ள அனைத்து காங்​கிரஸ் தொண்​டர்​களுக்​கும் இது மிக​வும் வரலாற்​றுச் சிறப்​புமிக்க மற்​றும் உணர்ச்​சிப்​பூர்​வ​மான நாளாகும்.

கடந்த 59 ஆண்​டு​களாக நமது தொண்​டர்​கள் கட்​சி​யின் சித்​தாந்​தத்தை ஏந்​தி, இரவு பகலாகப் போராடி வந்​துள்​ளனர். ஆட்​சி​யில் பங்​கேற்​ப​தற்​கான எந்​தவொரு நம்​பிக்​கைக் கீற்​றும் தென்​ப​டாத சூழ்​நிலை​யிலும் கூட, தமிழ்​நாடு மக்​களுக்கு இன்​னும் சிறந்த முறை​யில் சேவை செய்​வதற்​காக, அரசில் அதி​காரத்​தைப் பகிர்ந்து கொள்ள வேண்​டும் என்று நமது தொண்​டர்​கள் எப்​போதும் விரும்​பினர்.

அந்த வகை​யில், 59 ஆண்​டு​களுக்​குப் பிறகு இரண்டு காங்​கிரஸ் அமைச்​சர்​கள் இன்று புதிய அமைச்​சர​வை​யில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு அமைச்​சர் பதவி​களை​யும் நமது சித்​தாந்​தத்​துக்​காக எவ்​வித சுயநல​முமின்றி உழைத்த, அர்ப்​பணிப்​புமிக்க, விசு​வாச​மான மற்​றும் கடின உழைப்​பாளி​களான நமது தொண்​டர்​களுக்கே நாங்​கள் சமர்ப்​பிக்​கிறோம்.

அதே​போல், கடந்த 59 ஆண்​டு​களாக அதி​காரத்​தில் எந்​தப் பங்​கும் இல்​லாத நிலை​யிலும், தொண்​டர்​களின் பக்​கபல​மாக நின்ற நமது கட்​சித் தலை​மைக்​கும் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். அமைச்​சர்​களாகப் பொறுப்​பேற்​றுள்ள இரு​வரும் கட்​சித் தொண்​டர்​களின் நலனுக்​காகத் தங்​களை முழு​மை​யாக அர்ப்​பணித்​துக் கொள்​வார்​கள் என்று நான் நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல் காங்​கிரஸ் மூத்த தலை​வர் பிர​வீன் சக்​ர​வர்த்தி கூறியதாவது: கடந்த ஆறு தசாப்​தங்​களாக ஆட்​சி​யில் இல்லாவிட்டாலும் கூட, காங்​கிரஸ் கட்சி தொடர்ந்து நிலைத்து நின்​று, பல்​வேறு கூட்​ட​ணி​களின் வாயி​லாகத் தனது வாக்கு வங்கியைக் தக்​க​வைத்​து, தேர்​தல்​களில் ஒரு முக்​கியப் பங்​காற்றி வந்​துள்​ளது. அந்​தப் பெருமை அனைத்​தும் காங்​கிரஸ் கட்​சி​யின் நிறு​வனக் கட்​டமைப்​புக்​கும், அதன் தலை​மைக்​குமே சேரும். இன்று, நிச்​சய​மாக நமக்கு அரசில் பங்​கேற்​ப​தற்​கான ஒரு நல்ல வாய்ப்​புக் கிடைத்​துள்​ளது.

மேலும், இது தமிழக அரசி​யல் வரலாற்​றில் ஒரு மிகப்​பெரிய திசை​மாற்​றத்​தைக் குறிக்​கிறது. ஏனெனில், 1952-ம் ஆண்​டுக்​குப் பிறகு தமிழகத்​தில் முதன்​முறை​யாக ஒரு கூட்டணி ஆட்சி மலர​விருக்​கிறது.

எனவே, இது தமிழ்​நாடு காங்​கிரஸ் கட்​சி​யின் தொண்​டர்​கள், தலை​வர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள் என அனை​வருக்​கும் நிச்​சயமாக ஒரு மகிழ்ச்​சி​யான தருண​மாகும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார். இதே​போல் காங்​கிரஸ் கட்​சியைச் சேர்ந்த பல தலை​வர்​களும் தங்​களு​டைய மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தியுள்​ளனர்​.