惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
The GitHub Blog
The GitHub Blog
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
I
InfoQ
N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
H
Help Net Security
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
Y
Y Combinator Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘முதல்வர் விஜய் அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி அநீதியானது...
சி.எஸ். ஆறுமுகம் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘விவசாயிகளுக்கான பயிர்க் கடன் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. 2025, மே 1-ம் தேதி முதல் 2026, பிப்.28-ம் தேதி வரை கடன் பெற்றவர்களுடைய கடன்கள் மட்டுமே தள்ளுபடி என்பதும் முற்றிலும் அநீதியானது, பாரபட்சமானது’ என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர்க் கடனை ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி தமிழக முதல்வர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அறிவிப்பு தொடர்பாக விவசாயிகள் பகிர்ந்த கருத்துகள்:

கணபதியக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன்: “தமிழக அரசு விவசாயிகளுக்கான வேளாண்மை கடனை ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி என்று அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் இந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை முழு தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது 2-வது அறிவிப்பு கிடைக்கப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது.

5 ஏக்கர் விவசாயம் செய்தால் கடன் உச்சவரம்பு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ஆகும். 2 லட்சம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்களுக்கு பயிருக்கு ஏற்றார்போல் பயிர்க் கடன் உச்சவரம்பு மாறுபடும். ஆகையால், இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனால், புதிதாக கடன் வாங்க விவசாயிகளுக்கு வாய்ப்பு இல்லை.

தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி, அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு புதிதாக கடன் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்குரிய அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மிகக் குறைவான அளவில் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள். புதிய கடன் பெற இயலாது. இதில் குழப்பம் அதிகமாக இருக்கும்” என்றார் அவர்.

சுவாமிமலை சுந்தர விமலநாதன்: “தமிழக முதல்வர் விஜய் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற உழவர்களுக்கு தள்ளுபடி உண்டு என்று அறிவித்திருக்கிறார்கள். இது எவ்விதத்திலும் போதுமானது அல்ல. இந்த அறிவிப்பையும் மீண்டும் மறுபரிசீலனை செய்து கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்.

அரசிடம் நிதி பற்றாக்குறை இருக்குமேயானால் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை மத்திய கால மாற்றுக் கடன்களாக மாற்றி அமைப்பதற்கு, ஏற்கெனவே உள்ள முன்னுதாரணங்களை கடந்த கால நடைமுறையை அரசு பின்பற்றி கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறான கடன் தள்ளுபடி செய்வது குறித்து உழவர் பிரதிநிதிகளோடு கலந்து ஆலோசித்து சாத்தியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்திருக்க வேண்டும்.

2025 மே 1-ம் தேதி முதல் 2026 பிப். 28-ம் தேதி வரை கடன் பெற்றவர்களுடைய கடன்கள் மட்டுமே தள்ளுபடி என்பதும் முற்றிலும் அநீதியானது, பாரபட்சமானது, ஏற்கத்தக்கதல்ல, தவறானதும் கூட.

எனவே, மத்திய அரசிடம் இருந்து வட்டி இல்லா கடனாக ரூ.12 ஆயிரம் கோடி பெற்று தமிழக உழவர்களின் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார் அவர்.

நெய்குப்பை விவசாயி கலைமணி: “தமிழக முதல்வர் விஜய்யின் அறிவிப்பு பயனற்றதாகும். 2025 மே 1-ம் தேதிக்கு முன் கடன் பெற்ற பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யாமல் உள்ளன. புதிய அறிவிப்பால் இவர்களுக்கு விடிவு காலம் ஏற்படப்போவது இல்லை. இதனால் விவசாயிகள் புதிய கடன்கள் வாங்க முடியாமலும், பழைய கடன் தள்ளுபடி ஆகாமலும் உள்ளன. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய அறிவிப்பாக இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகி உள்ளது” என்றார் அவர்.