惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
The GitHub Blog
The GitHub Blog
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Vercel News
Vercel News
腾讯CDC
博客园 - 聂微东
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
Last Week in AI
Last Week in AI
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தரமான ஓஆர்எஸ் கரைசல்களையே விற்பனை செய்ய வேண்டும்: மருந்து...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: அங்​கீகரிக்​கப்​பட்ட தரமான ஓஆர்​எஸ் கரைசல்​களையே விற்​பனை செய்ய வேண்​டும் என மருந்து கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ளது.

தமிழகத்​தில் கோடை வெயில் உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. கடும் வெப்​பத்​தால் மக்​கள் அவதிப்​படு​கின்​றனர். வெயி​லின் தாக்​கத்​தால் ஏற்​படும் உடல் நீர்ச்​சத்து இழப்பை சமன் செய்ய அனைத்து வயதினரும் பரிந்​துரைக்​கப்​பட்ட அளவில் ஓஆர்​எஸ் கரைசல்​களை பரவலாக எடுத்​துக்​கொள்ள மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இதன்​மூலம் கோடை கால பாதிப்​பு​களில் இருந்து தங்​களை தற்​காத்​துக் கொள்​ளலாம். பொது​மக்​களுக்கு தரமான ஓஆர்​எஸ் கரைசல்​களை விற்​பனை செய்​வது தொடர்​பாக மருந்​துக் கடைகள் உரிமை​யாளர்​களுக்கு தமிழ்​நாடு மருந்து கட்​டுப்​பாட்டு வாரி​யம் மற்​றும் உணவு பாது​காப்​புத் துறை வழி​காட்டு நெறி​முறை​களை வழங்​கி​யுள்​ளது.

அதன்​படி, வயிற்​றுப்​போக்கு மற்​றும் வாந்தி போன்ற பாதிப்​பு​களால் நீர்ச்​சத்து இழப்பு ஏற்​படும்​போது, உலக சுகா​தார நிறு​வனத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட தரமான ஓஆர்​எஸ் கரைசல்​களை மட்​டுமே மருந்​துக் கடை உரிமை​யாளர்​கள் விற்​பனை செய்ய வேண்​டும். குறிப்​பாக, ஓஆர்​எஸ் தயாரிப்​பு​களின் பேக்​கிங்​கில் தயாரிப்பு தேதி, காலா​வதி தேதி மற்​றும் பேட்ச் எண் ஆகியவை கட்​டா​யம் அச்​சிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

அதே​போல், இந்​திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட ஓஆர்​எஸ்​எல், ஓஆர்​எஸ்​எல் பிளஸ் மற்​றும் ஓஆர்​எஸ் ஃபிட் போன்ற பெயர்​களில் கிடைக்​கும் பானங்​கள், பழச்​சாறு அடிப்​படை​யில் தயாரிக்​கப்​படு​பவை என்​பதை விற்​பனை​யாளர்​கள் பொது​மக்​களுக்கு தெளிவுபடுத்த வேண்​டும்.

இதுத​விர, உலக சுகா​தார நிறு​வனத்​தின் அங்​கீ​காரம் பெற்​ற​தாக போலி​யாக கூறி தரமற்ற கரைசல்​களை விற்​பனை செய்​யும் மருந்​துக் கடைகள் மற்​றும் அதன் உரிமை​யாளர்​கள் மீது கடுமை​யான சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அரசு எச்​சரித்​துள்​ளது.