

























ராஜா பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இசை ஆல்பம், ‘சைலன்ட் இன்ஃபுளூயன்சர்’. பலராம் ஜெ.பாலாஜி நடித்துள்ள இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், ஐக்கி பெர்ரி பாடியுள்ளனர். பாடலை ஜெயந்தி எழுதியுள்ளார். அஸ்வமித்ரா இசை அமைத்துள்ள இப்பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்துள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் சரண், பேரரசு, ஆர்.வி. உதயகுமார், எழில், வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி, இப்பாடலில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இது கண்டிப்பாக வரவேற்பைப் பெறும். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களைச் சரியாக பயன்படுத்தத் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகைக் காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。