惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
腾讯CDC
博客园 - 聂微东
爱范儿
爱范儿
罗磊的独立博客
P
Proofpoint News Feed
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 司徒正美
美团技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
I
InfoQ
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காவல் துறையில் மாநில பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: ...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

மதுரை: தமிழக காவல் துறையில் காவலர்​களுக்கு மாநில அளவி​லான பணிமூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்​தும் போட்​டித் தேர்​வில் 2-ம் நிலை காவலர்​களாக தேர்வு செய்​யப்​படு​பவர்​கள், காவல் துறை​யில் 10 ஆண்​டு​கள் பணி முடித்த பிறகு முதல் நிலை காவலர்​களாக​வும், 5 ஆண்​டு​களுக்குப் பிறகு தலை​மைக் காவலர்​களாக​வும், அடுத்து சிறப்பு சார்பு ஆய்​வாள​ராக​வும் பதவி உயர்வு வழங்​கப்​படும்.

இவர்​களில் முதல் நிலை காவலர்​களாக தேர்வு செய்​யப்​பட்டு மதுரை, திருச்​சி, நெல்​லை​யில் ஆயுதப்​படைக்கு மாற்​றம் செய்​யப்​படும்​போது, அங்​குள்ள காலிப் பணி​யிடங்​களின் அடிப்​படை​யில் அவர்​களுக்கு விரை​வில் பதவி உயர்வு கிடைத்து விடு​கிறது.

சரக அளவில் பதவி உயர்வு வழங்​கப்​படு​வ​தால் பணி​யில் இளை​ய​வர்​களின் கீழ் பணி​யாற்​றும் நிலை ஏற்​படுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்​களில் காவல்​துறை​யில் காலி பணி​யிடங்​கள் குறை​வாக இருப்​ப​தால் விரை​வில் பதவி உயர்வு கிடைப்​ப​தில்​லை.

இந்​நிலை​யில், 170 காவலர்​கள் விரை​வில் பதவி உயர்வு வழங்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் வழக்கு தொடர்ந்​தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், என். செந்​தில்​ கு​மார் அமர்வு விசா​ரித்​தது.

தமிழக உள்​துறை கூடு​தல் தலை​மைச் செயலர் தாக்​கல் செய்த பதில் மனு​வில், ஆயுதப்​படை​யில் 2-ம் நிலை காவலர்​களாக தேர்​வாகும் நாளி​லிருந்து கணக்​கீடு செய்து சிறப்பு சார்பு ஆய்​வாளர், சார்பு ஆய்​வாளர், ஆய்​வாளர் பதவி உயர்​வுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு முறை அமல்​படுத்​தப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.

பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: காவலர்​களுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும். அரசின் முடி​வின்​படி ஆயுதப்படை​யில் 1993 பேட்​ஜில் தேர்​வாகி இது​வரை பணி​யில் உள்​ளவர்​களுக்கு மாநில அளவி​லான பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

இதற்​கான பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு உடனடி​யாக பதவி உயர்வு வழங்​கப்பட வேண்​டும். மாநில அளவி​லான சீனி​யாரிட்டி 2026 ஜன. 1-ம் தேதி பணி​யில் இருப்​பவர்​களிடம் இருந்து அமல்​படுத்த வேண்​டும். 2025 டிச. 31-ம் தேதி அல்​லது அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்​றவர்​களுக்கு இது பொருந்​தாது.

அவர்​கள் இந்த உத்​தர​வின் அடிப்​படை​யில் பணப் பலன்​களையோ, நிலுவை பலன்​களையோ கோர முடி​யாது. ஏற்​கெனவே சரக அடிப்​படையி​லான தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்​றவர்​களை​யும், அவர்​கள் பெறும் பலன்​களிலும் எந்த மாற்​ற​மும் செய்​யக்கூடாது.

மாநில அளவி​லான பணிமூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு குறித்து அரசு உடனடி​யாக அரசாணை பிறப்​பிக்க வேண்​டும். மாநில பணி மூப்பு பட்​டியல் தயார் செய்து 2 மாதங்​களில் வெளி​யிட வேண்​டும். 2026 ஜன.1-ம் தேதி ஓய்வு பெற்​றவர்​களுக்​கும் இந்த உத்​தரவு பொருந்​தும்​. இவ்​வாறு உத்​தர​வில் நீதிபதிகள்​ தெரி​வித்​துள்​ளனர்​.