惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
G
Google Developers Blog
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客
博客园 - 聂微东
V
Visual Studio Blog
博客园_首页
D
DataBreaches.Net
腾讯CDC
I
InfoQ
F
Fortinet All Blogs
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
云风的 BLOG
云风的 BLOG
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கர சேவகர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தற்போது ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

அயோத்​தி: கர சேவகர்​கள் மீது ஒரு காலத்​தில் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​ய​வர்​கள், தற்​போது ராம பக்​தர்​கள் பற்றி கவலைப்​படு​கின்​றனர் என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கிண்​டலடித்​துள்​ளார்.

ராமர் கோயில் கட்ட வசூலிக்​கப்​பட்ட நன்​கொடை​யில் கோடிக்​கணக்​கான ரூபாய் கணக்​கில் காட்​டப்​பட​வில்லை என சமாஜ்​வாதி கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ் கூறி​னார்.

நன்​கொடை​யில் ரூ.7.5 கோடி முறை​கேடு செய்​யப்​பட்​ட​தாக சமாஜ்​வாதி கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்ஏ பவன் பாண்டே குற்​றம் சாட்​டி​னார். இதையடுத்து ராமர் கோயில் அறக்​கட்​டளை விடுத்த வேண்​டு​கோளை ஏற்று சிறப்பு விசாரணை குழு (எஸ்​ஐடி) இந்த குற்​றச்​சாட்டு குறித்து விசா​ரணை நடத்த உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் நேற்று கூறிய​தாவது: ராமர் கோயில் விஷ​யத்​தில் எதிர்க்​கட்​சி​யினரின் இரட்டை நிலையை பாருங்​கள். அயோத்​தி​யில் ராமர் கோயில் கட்​டு​வதை தடுக்க முயற்​சித்த காங்​கிரஸ், தற்​போது அயோத்தி பற்றி கவலைப்​படு​கிறது.

பகவான் ராமர் என்​பவரே இல்லை என வெட்​கமே இல்​லாமல் உச்ச நீதி​மன்​றத்​தில் காங்​கிரஸ் மனு ​தாக்​கல் செய்​தது. தற்​போது ராம பக்​தர்​கள் புண்​படுத்​தப்​பட்​டுள்​ளனர் என கூறுகிறது.

ஜெய் ராம் கோஷமிட்ட கரசேவகர்​கள் மீது துப்​பாக்கி சூடு, தடியடி நடத்​திய சமாஜ்​வாதி கட்​சி, தற்​போது மற்​றவர்​களுக்கு போதிக்​கிறது. ராமர் கோயில் நன்​கொடை விவ​காரம் தொடர்​பாக விசா​ரிக்க எஸ்​ஐடி அமைத்​துள்​ளோம்.

அது அனைத்து விஷ​யங்​களை​யும் தெளி​வாக வெளிப்​படுத்​தும். ராம பக்​தர்​களின் உணர்​வு​கள் பாதிக்​கு​மாறு யாரும் எந்த கருத்​தும் தெரிவிக்க வேண்​டாம். நன்​கொடை முறை​கேடு தொடர்​​பாக ஆ​தா​ரம்​ இருந்​​தால்​, அவர்​கள்​ அதை எஸ்​ஐடியிடம்​ வழங்​க வேண்​டும்​. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.