惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹாரி கேன் 2 கோல் அடித்து அசத்தல்: குரோஷியாவை வீழ்த்தியது ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

டல்லாஸ்: பிஃபா உலகக்​கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் டல்​லாஸ் நகரில் உள்ள ஏடி&டி மைதானத்​தில் ‘எல்' பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இங்கிலாந்து - குரோஷியா அணி​கள் மோதின.

போட்​டி​யின் 12-வது நிமிடத்​தில் பெனால்டி பகு​தி​யில் இங்கிலாந்து அணி​யின் நோனி மடுயேகேவை குரோஷி​யா​வின் லூகா மோட்​ரிச் ஃபவுல் செய்​தார். இதனால் இங்​கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்​தது. கேப்​டன் ஹாரி கேன் அடித்த பெனால்டி கிக்கை குரோஷிய கோல்​கீப்​பர் டொமினிக் லிவாகோவிக் இடது பக்​க​மாக பாய்ந்து தடுத்​தார். ஆனால் அவர், கோல் லைனை விட்டு சற்று முன்னே வந்​திருந்​தார்.

அதேவேளை​யில் குரோஷியா வீரர் குவார்​டியோல் முன்​கூட்​டியே பெனால்டி பகு​திக்​குள் நுழைந்​தார். இதனால் இங்​கிலாந்து அணிக்கு மீண்​டும் பெனால்டி கிக் வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. இதை ஹாரி கேன் சரி​யாக கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் இங்​கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது.

36-வது நிமிடத்​தில் குரோஷியா அணி பதிலடி கொடுத்​தது. குரோஷியா அணி​யின் பீட்​டர் சுசிக் பந்தை விரை​வாக கடத்​திச் சென்று இங்​கிலாந்து அணி​யின் வீரர் ஸ்டோன்​ஸுக்கு போக்கு காட்டி மார்ட்​டின் பாடுரி​னா​வுக்கு தட்​டி​விட்​டார். அவர், அதை பாக்ஸ் பகு​திக்கு வெளியே இருந்து வலு​வாக உதைக்க இரு டிஃபெண்​டர்​களுக்கு ஊடாக சென்று கோல் கீப்​பரின் தடுப்பு அரணை மீறி கோலாக மாறியது.

42-வது நிமிடத்​தில் டெக்​லான் ரைஸின் கார்​னர் கிக்கை ஹாரி கேன் தலை​யால் முட்டி கோல் அடிக்க இங்​கிலாந்து அணி 2-1என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. அதைத்​தொடர்ந்து முதல் பாதி​யின் கூடு​தல் நேரத்​தில் 45+5-வது நிமிடத்​தில் குரோஷியா அணி ஒரு கோல் அடித்து ஆட்​டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்​தது.

பாசாலிச் பந்தை மேலே தூக்கி அடிக்க, பெரிசிச் அதைத் தலை​யால் முட்டி மூசா​வின் வழிக்​குத் திருப்​பி​விட்​டார். அவர், அதை லாவக​மாக கோல் வலைக்​குள் செலுத்​தி​னார். இதனால் முதல் பாதி ஆட்​டம் 2-2 என்ற கணக்​கில் சமநிலை​யில் இருந்​தது.

இரண்​டாவது பாதி தொடங்​கிய 47-வது நிமிடத்​தில் ஜூட் பெலிங்​ஹாம் வலது பக்​க​வாட்​டில் இருந்து பந்தை விரை​வாக கடத்​திச் சென்று கோல் அடிக்க இங்​கிலாந்து அணி 3-2 என முன்​னிலை பெற்​றது. இதன் பின்​னர் இங்​கிலாந்து அணி​யின் கோல் அடிக்​கும் துல்​லிய​மான 5 வாய்ப்​பு​களை குரோஷி​யா​வின் கோல்​கீப்​பர் டொமினிக் லிவாகோவிக் அற்​புத​மாக தடுத்​தார்.

ஆட்​டத்​தின் 73-வது நிமிடத்​தில் பதிலி வீர​ராக களமிறங்​கிய புகாயோ சாகா மற்​றும் மார்​கஸ் ராஷ்ஃ​போர்ட் கூட்​டணி இங்​கிலாந்​தின் வெற்​றியை உறுதி செய்​தது. சாகா கொடுத்த நேர்த்​தி​யான பாஸை ராஷ்ஃ​போர்ட் 85-வது நிமிடத்​தில் கோலாக மாற்ற இங்​கிலாந்து அணி 4-2 என முன்​னிலை பெற்​றது. குரோஷியா அணி​யால் போராடிய போதி​லும் மேற்​கொண்டு கோல் அடிக்க முடி​யாமல் போனது.

முடி​வில் இங்​கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்த வெற்​றி​யின் மூலம் இங்​கிலாந்து அணி ‘எல்’ பிரி​வில் 3 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளது- இங்​கிலாந்து அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் வரும் 24-ம் தேதி கா​னா​வுடன் மோதுகிறது. அன்​றைய தினம் நடை​பெறும்​ மற்​றொரு ஆட்​டத்​தில்​ குரோஷி​யா, பனா​மா அணி​யை எ​திர்​கொள்​கிறது.