惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
IT之家
IT之家
爱范儿
爱范儿
量子位
小众软件
小众软件
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
The Cloudflare Blog
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரயில்வேயில் பணியாளர்களை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும்:...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ரயில்வே துறை​யில் பணி​யாளர்​களை குறைக்​கும் முடிவை கைவிட வேண்​டும் என மத்​திய அரசுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​திய ரயில்​வே​யில் 2 சதவீதம் (29,608) பணி​யிடங்​களை குறைக்​கும் பாஜக அரசின் அராஜக​போக்கு கண்​டனத்​துக்​குரியது. மக்​களுக்​கான ரயில்வே துறை​யில் இது​போன்ற அறி​விப்​பு​களை ஒரு​போதும் ஏற்​றுக் கொள்​ள​முடி​யாது.

இதனால், தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1906 பணி​யிடங்​கள் பாதிக்​கப்​படும். ஏற்​கெனவே பணி​யாளர் பற்​றாக்​குறை நிலவிக் கொண்​டிருக்​கும் நிலை​யில், இந்த நடவடிக்கை மீத​முள்ள ஊழியர்​களின் பணிச்​சுமையை அதி​கரிக்​கும்.

வந்தே பாரத், அம்​ரித் பாரத் போன்ற நவீன ரயில்​கள் அறி​முகம் செய்து வரும் சூழலில், பணி​யாளர்​களை குறைப்​பது ரயில் சேவை​யின் தரத்​தை​யும், பயணி​களின் பாது​காப்​பை​யும் கேள்விக்​குறி​யாக்​கும்.

இது ரயில்வே துறை​யில் தனி​யார் மயமாக்​கலை ஊக்​குவிக்​கும் முயற்​சி​யாகும். எனவே, இந்த பணி​யிடக் குறைப்பு முடிவை உடனடி​யாக மத்​திய அரசு கைவிட வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இந்​திய ரயில்​வே​யில் 2 சதவீத பணி​யாளர்​களை ரயில்வே நிர்​வாகம் குறைக்க முடிவு செய்​திருப்​பது தொழிலா​ளர் விரோத​போக்​காகும். இந்​தி​யா​வில் நாள் தோறும் 22 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

அதற்​கேற்ப புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​கி, பணி​யாளர்​களை நியமிப்​ப​தற்கு பதிலாக, பணி குறைப்பு மேற்​கொள்​வது என்​பது சரியல்ல. இந்​தி​யா​வின் முதன்​மை​யான பிரச்​சினை வேலை​யில்லா திண்​டாட்​டம்.

அதை போக்​கு​வ​தில் கவனம் செலுத்​தாத மத்​திய அரசு, ஆட்​குறைப்பு நடவடிக்​கை​யில் ஈடு​படு​வது, இளைய தலை​முறை​யினரின் நலன்​களுக்​கும், பொருளா​தார வளர்ச்​சிக்​கும் எதி​ரானது.

தி.க. தலை​வர் கி.வீரமணி: ரயில்வே துறை​யில் 2 சதவீத பணி​யிட குறைப்பு என்​பது தனி​யார் மயமாக்​கலின் முன்​னெடுப்பே ஆகும். தனி​யார் மயமாக்​கல் என்​பதும், பணி​யிடக் குறைப்பு என்​பதும் சமூகநீதி அடிப்​படை​யில் மிகப்​பெரிய ஆபத்​தாகும்.

இந்த நடவடிக்கை அனைத்து அரசு துறை​களி​லும் இதே போல் ஆட்​குறைப்பு செய்​வதற்​கான தொடக்​கமே ஆகும். இதை தொழிற்​சங்​கங்​களும், சமூகநீதி உணர்​வாளர்​களும் இணைந்து தொடக்​கத்​திலேயே தடுத்து நிறுத்த வேண்​டும்.

மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் ஜவாஹிருல்​லா: ஆண்​டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று தேர்​தல் நேரத்​தில் அறி​வித்​து​விட்​டு, இருக்​கின்ற வேலைகளை குறைக்​கும் பணி​களை முன்​னெடுப்​பது மத்​திய பாஜக அரசின் உண்மை முகத்தை வெளிச்​சம் போட்டு காட்​டு​கிறது.

ஏற்​கெனவே, பணி​யாளர்​கள் பற்​றாக்​குறை நிலவி வரும் சூழலில் ரயில்​வே​யில் ஆட்​குறைப்பு வேலைகளை செய்​வதை தவிர்த்​து, கூடு​தலாக பணி​யாளர்​களை நியமிக்​க மத்​தி​ய அரசு நடவடிக்​கை எடு​க்​க வேண்​டும்​.