
























குறிப்பாக மாநகராட்சி நகர சமுதாய நல்வாழ்வு மையங்கள், நகர ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை தொடர்ந்து நடைபெறும். இப்பணியில் 6,564 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளை, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。