


























Updated on
:
1 min read
புதுடெல்லி: ஒரு நெட்வொர்க் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காட்டியதற்காக நேபாள ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நேபாள ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் சமூக ஊடக சேனல்களில் சமீபத்தில் பகிரப்பட்ட நெட்வொர்க் வரைபடத்தில் உள்ள பிழைக்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம்.
அந்த வரைபடத்தில் சர்வதேச எல்லைகள் தொடர்பான வரைபடவியல் பிழைகள் இருந்தன. அவை நேபாளம் அல்லது நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை, நாங்கள் உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டோம், மேலும் எங்கள் தகவல்கள் மிக உயர்ந்த துல்லிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்தப் பதிவு ஏற்படுத்திய மன வருத்தத்துக்கும் வருந்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。