





















Updated on
:
1 min read
‘கர’ இசை வெளியீட்டு விழாவில், ‘வடசென்னை 2’ படம் எப்போது என்பது குறித்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருமே பேசியுள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள ’கர’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றிமாறன் பேச மேடையேறிய உடன், அங்கிருந்த ரசிகர்கள் கடுமையாக கூச்சலிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், “தயாரிப்பாளர் இங்கு தான் இருக்கிறார். நாயகனும் இங்கு தான் இருக்கிறார். நானும் இங்கு தான் இருக்கிறேன். சீக்கிரமா… ரொம்ப சீக்கிரமா தொடங்குகிறோம்” என்று ‘வடசென்னை 2’ பெயரைக் குறிப்பிடாமல் பேசினார். கடைசியாக மேடையேறிய தனுஷ், தனது பேச்சின் தொடக்கத்திலேயே ‘வடசென்னை 2’ குறித்து பேசினார்.
அதில் தனுஷ், “நான் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் ‘வடசென்னை 2’ குறித்து கேள்வி எழுப்புவீர்கள். ஆகையால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும். நீங்கள் நினைக்கும் அளவுக்கு கூட தூரம் இல்லை. கிட்ட வந்துடுச்சு. அன்புவின் எழுச்சி விரைவில்” என்று தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。