


























Updated on:
சென்னை: “திரைக்கதை எழுதுவதில் இந்தியாவில் மிகவும் முதன்மையான இடத்தை வகித்தவர் பாக்யராஜ். அவரது திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் பிரபல நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் இளையராஜா வெளியிட்ட வீடியோ பதிவில், “பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். தற்போது சுற்றுப்பயணத்தில் இருப்பதால், உடனடியாக அவரை சென்று பார்க்கவோ, இரங்கல் செய்தியை அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கவோ இயலாத நிலையில் இருக்கிறேன். என்னோடு ஆரம்ப காலத்தில் நெருங்கி பழகிய பாக்யராஜ் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
திரைக்கதை எழுதுவதில் இந்தியாவில் மிகவும் முதன்மையான இடத்தை வகிப்பவர். அவரது திடீர் மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயணத்தில் இருந்ததால் உடனடியாக இரங்கல் செய்தியை தெரிவிக்க முடியவில்லை. அவரை இழந்து வருந்தும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。