

























புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்த மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை நான் வரவேற்கிறேன்.
இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் போக்குவரத்து, வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது. எஞ்சிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。