惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
B
Blog
P
Proofpoint News Feed
美团技术团队
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
罗磊的独立博客
L
LangChain Blog
GbyAI
GbyAI
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக மூத்த தலைவர்க...
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: பிரதமர் மோடி தலை​மையி​லான அரசை கவிழ்க்க காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி சதி செய்​வ​தாக பாஜக குற்றம்சாட்​டி​யுள்​ளது. அவர் வெளி​நாட்டு சக்​தி​களின் தூண்​டு​தலின் பேரில் செயல்​படு​வ​தாக​வும் பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

காங்​கிரஸ் கட்​சி​யின் சிறு​பான்​மை​யினர் பிரி​வின் ஆலோ​சனைக் குழு கூட்​டம் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், அக்​கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலை​மையி​லான அரசு ஓராண்​டுக்​குள் கவிழும் என்று பேசி​ய​தாக தகவல் வெளி​யானது. இதைத் தொடர்ந்​து, ராகுல் காந்​தி​யின் சதித் திட்​டம் அம்பலமாகிவிட்டதாக மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல பாஜக தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த ஊடக செய்​தியை எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்​துள்ள மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல், இந்தி மொழி​யில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ராகுல் காந்​தி​யின் இந்த கருத்து காங்கிரஸ், பல எதிர்க்​கட்​சிகள் மற்​றும் ‘டூல்​கிட் கும்​பல்' (toolkit gang) ஆகியவை இணைந்து இந்​தி​யாவை நிலைகுலை​யச் செய்ய நினைக்​கும் ஒரு பெரிய சதியை சுட்​டிக்​காட்​டு​கிறது. இது ஒரு சாதாரண கருத்து அல்ல. மாறாக, நாட்​டில் அராஜகத்​தைப் பரப்​புவதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு கடுமை​யான சதி​யாகும்.

தேர்​தல் களத்​தில் காங்​கிரஸால் பாஜக​வைத் தோற்​கடிக்க முடியாது என்​ப​தை​யும், மக்​கள் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்​துள்​ள​தால் மோடி அரசை அகற்ற முடி​யாது என்ப​தை​யும் உணர்ந்​து​கொண்ட ராகுல் காந்​தி​யும் அவரது கூட்டாளி​களும் நாடு முழு​வதும் வன்​முறையைத் தூண்ட முயற்சிக்​கின்​றனர். இந்​தியா மீதான அவர்​களின் வெறுப்பு மிகவும் ஆழமானது. நாட்​டில் எந்​தவொரு நேர்​மறை​யான விஷயங்​கள் நடப்​ப​தை​யும் அவர்​களால் பொறுத்​துக்​கொள்ள முடியாது.

இந்த நாட்டு மக்​கள் விவேக​மானவர்​கள். ராகுல் காந்​தி, எதிர்க்கட்சிகள் மற்​றும் நாட்​டின் நலனுக்கு எதி​ராக செயல்​படும் டூல்​கிட் கும்​பலின் உண்​மை​யான தன்​மையை அவர்​கள் முழுமையாகப் புரிந்​து​கொண்​டுள்​ளனர். மக்​கள் அவ்​வப்​போது இத்​தகைய சக்​தி​களுக்கு வலு​வான பதிலடி கொடுத்​துள்​ளனர். இந்தி​யா​வுக்கு தீ வைக்க நினைக்​கும் ‘இன்​டி’ கூட்​ட​ணி​யின் சதி ஒரு​ போதும் வெற்றி பெறாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் சம்​பிட் பத்ரா வெளி​யிட்ட வீடியோ செய்​தி​யில், “நாட்​டில் கலவரங்​களைத் தூண்​டி, அராஜகத்தின் மூலம் மோடி அரசை வீழ்த்த ராகுல் காந்தி முயற்சிக்​கிறார்.

இந்​தி​யா​வில் ஜனநாயகத்தை முடிவுக்​குக் கொண்​டு​வரும் நோக்​கில், ஜார்ஜ் சோரஸ் போன்ற தனது எஜமானர்​கள் மற்​றும் அவரது வெளி​நாட்​டுப் பயணங்​களுக்கு நிதி​யளிக்​கும் வெளி​நாட்டு நிறு​வனங்​களின் தூண்​டு​தலின் பேரில், ராகுல் காந்தி ஒரு வெளி​நாட்டு திட்​டத்தை செயல்படுத்துகிறார் என்​பதை அவரது கருத்​துகள் திட்​ட​வட்​ட​மாக தெளிவுபடுத்​துகின்​றன. மோடி அரசுக்கு மக்​களின் ஆசி இருக்​கும் வரை, அது நாட்​டுக்​கு தொடர்ந்​து சேவை செய்​யும்​’’ என கூறியுள்ளார்​.