惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
S
SegmentFault 最新的问题
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
Last Week in AI
Last Week in AI
Recent Announcements
Recent Announcements
腾讯CDC
I
InfoQ
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பணியிட உத்தரவு வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஊழி...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

சென்னை: மீண்டும் பணி​யில் சேர பணி​யிட உத்​தரவு வழங்​கு​வதற்​காக, ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்​கிய​தாக, மின்​வாரிய அலு​வலக உதவி​யாளர் ஒரு​வரை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழ்​நாடு மின்​வாரிய (பெசன்ட்​நகர்) உதவி பொறி​யாளர் பாலசுப்​பிரமணி​யன் என்​பவர், கடந்த 2023 செப்​.23 அன்று ரூ.10 ஆயிரம் லஞ்​சம் பெற்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பான வழக்​கு, விசா​ரணை​யில் இருந்து வரு​கிறது. இதற்​கிடை​யில், அவருக்கு விதிக்​கப்​பட்ட பணி​யிடை நீக்க (சஸ்​பெண்ட்) உத்​தரவை அடை​யாறு மேற்​பார்வை பொறி​யாளர் கடந்த 2026 ஜூன் 12-ம் தேதி​யன்று ரத்து செய்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், மீண்​டும் பணி​யில் சேருவதற்​கான பணி​யிட உத்​தர​வை, சென்னை அண்ணா சாலை​யில் உள்ள தலைமை பொறி​யாளர் (பணி​யாளர் பிரிவு) அலு​வல​கம் மூலம் வழங்க வேண்​டி​யிருந்​தது.

இந்​நிலை​யில், பணி​யிட உத்​தரவு பெற்​றுத் தரு​வதற்​காக, தமிழ்​நாடு மின்​வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரி​வில் உதவி​யாள​ராக பணி​யாற்​றும் பாலாஜி என்​பவர், பாலசுப்​பிரமணி​யனிடம் ரூ.1.50 லட்​சம் லஞ்​சம் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது. பின்​னர், பேச்​சு​வார்த்​தை​யில் அந்த தொகை ரூ.1.30 லட்​ச​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், முதற்​கட்​ட​மாக ரூ.50 ஆயிரம் லஞ்​சப் பணத்தை நேற்று வழங்​கு​மாறு பாலாஜி கேட்​ட​தாக தெரி​கிறது. இதுகுறித்​து, பாலசுப்​பிரமணி​யன் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸில் புகார் அளித்​தார்.

இதையடுத்​து, அதி​காரி​கள் ஏற்​பாடு செய்த சோதனை நடவடிக்​கை​யின் போது, சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள தமிழ்​நாடு மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் பாலாஜி, புகார்​தா​ரரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்​சப் பணத்தை நேற்று பெற்​றுள்​ளார்.

அப்​போது, மறைந்​திருந்த லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார், அவரை சுற்றி வளைத்து கைது செய்​தனர். அவரிடம் தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.