
































Updated on
:
1 min read
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
வாக்களித்த பின்னர் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னைக்கு வரத் தொடங்கினர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானங்களில் சென்னை செல்வதற்கு திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஓரிரு விமானங்களில் மட்டுமே, சில டிக்கெட்டுகள் இருந்தன. அந்த டிக்கெட் கட்டணம் பலமடங்கு அதிகரித்திருந்தது.
தூத்துக்குடி - சென்னைக்கு வழக்கமாக ரூ.5,354 இருந்த கட்டணம் நேற்று முன்தினம் இரவுமுதல் நேற்று காலை வரை ரூ.17,089 வரையும், மதுரை - சென்னைக்கு ரூ.5099 ஆக இருந்த கட்டணம் ரூ.32,508 வரையும், திருச்சி - சென்னைக்கு ரூ.4,551 ஆக இருந்த கட்டணம் ரூ.14,310 வரையும், கோவை - சென்னைக்கு ரூ.4,634 ஆக இருந்த கட்டணம் ரூ.11,149 வரையும் உயர்ந்திருந்தன.
விமான டிக்கெட் கட்டண உயர்வு, தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。