惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
B
Blog
P
Proofpoint News Feed
美团技术团队
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
罗磊的独立博客
L
LangChain Blog
GbyAI
GbyAI
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் திருப்பம்: அன...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பையா கொலை வழக்​கில், தண்​டனை விதிக்​கப்​பட்ட 9 பேரை​யும் விடு​தலை செய்து சென்னை உயர் நீதி​மன்​றம் மிகப்​பெரிய தவறிழைத்​துள்​ளது. அவர்​கள் அனை​வருக்​கும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

பிரபல நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பை​யா, கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் இருந்த நிலப்​பிரச்​சினை தொடர்​பாக சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் கடந்த 2013-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் ஒரு கும்​பலால் வெட்​டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் அரசு பள்ளி ஆசிரியர் பொன்​னுச்​சாமி, அவரது மகன்​கள் வழக்​கறிஞர் பாசில், பொறி​யாளர் போரிஸ் மற்​றும் வில்​லி​யம், மருத்​து​வர் ஜேம்ஸ் சதீஷ்கு​மார், பொறி​யாளர் முரு​கன், செல்​வபிர​காஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்​டனை​யும், பொன்​னுச்​சாமி​யின் மனைவி மேரி புஷ்பம் மற்​றும் கூலிப்​படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசு​ராஜன் ஆகியோ​ருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும் விதித்து சென்னை அமர்வு நீதி​மன்​றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தீர்ப்​பளித்​தது.

இந்த தண்​டனையை எதிர்த்து அனை​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். இதை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கடந்த 2024 ஜூன் 14 அன்று பிறப்​பித்த தீர்ப்​பில், ‘‘இந்​தக் கொலை வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 9 பேருக்​கும் எதி​ரான குற்​றச்​சாட்​டுக்​களைக் காவல் துறை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கத் தவறி விட்​டது’’ எனக் கூறி மரண தண்​டனை விதிக்​கப்​பட்ட 7 பேர், ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட 2 பேர் என 9 பேருக்​கும் கீழமை நீதி​மன்​றம் விதித்த தண்​டனையை ரத்து செய்து உடனடி​யாக விடு​தலை செய்ய உத்​தர​விட்​டனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்​பிலும், கொலை செய்​யப்​பட்ட மருத்​து​வர் சுப்​பை​யா​வின் மனைவி சாந்தி தரப்​பிலும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், சதீஷ் சந்​திரசர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பிரபல நரம்​பியல் மருத்​து​வர் சுப்​பையா கொலை​யில், மேல்​முறை​யீட்டு வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் முறை​யாக விசா​ரிக்​கவில்​லை. சாட்​சி​யங்களை ஆய்வு செய்​யாமல் குற்​றம் சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் விடு​தலை செய்து மிகப்​பெரிய தவறிழைத்​துள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இத்​தகைய தீர்ப்பு கடும் அதிருப்தி அளிக்​கிறது.

பட்​டப்​பகலில் நடந்த இந்​தக் கொலை வழக்கை விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம், அதன் நோக்​கத்​தை​யும், பின்​னணி​யை​யும் ஆராய்ந்து சாட்​சி​யங்​கள் மற்​றும் ஆதா​ரங்​களைக் கவனத்​தில் கொண்​டு​தான் குற்​றம் சாட்​டப்​பட்ட 7 பேருக்கு மரண தண்​டனையை​யும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்​டனையை​யும் விதித்​துள்​ளது.

அதைக் கூட உயர் நீதி​மன்​றம் முறை​யாக கவனத்​தில் கொள்​ளாதது துர​திருஷ்ட​வச​மானது. அனை​வரை​யும் கூண்​டோடு விடு​தலை செய்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பு சட்​டப்​படி ஏற்​புடையதல்ல. எனவே, அந்​தத் தீர்ப்பை நாங்​கள் ரத்து செய்​கிறோம். சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அனு​ம​தித்​தால் அது தவறான நடை​முறைக்கு வழி​வகுத்து விடும்.

மனிதனின் பேராசை எந்த எல்​லைக்​கும் செல்​லும் என்ற ரவீந்​திர​நாத் தாகூரின் வரி​களுக்கு இந்​தக் கொலை வழக்கு சிறந்த உதா​ரணம். தான் பெற்ற பிள்​ளை​களைப் பெற்​றோர் எப்​போதும் நேசிப்​பார்​கள். பாசத்​தின் மிகு​தி​யால் வயதான காலத்​தி​லும் அவர்​கள் செய்​யும் செயல்​கள் நல்​ல​தா, கெட்​டதா என்​பதை ஆரா​யாமல் அவர்​களை எதிர்த்து கேள்வி கேட்​பது இல்​லை. இந்த வழக்​கில் பொன்​னுச்​சாமி​யும், அவரது மனைவி மேரி புஷ்ப​மும் தங்​களது மகன்​களு​டன் இணைந்து சதியில் ஈடு​பட்​டுள்​ளனர். இதற்​காக அவர்​களின் குற்​றச்​செயல்​களை மன்​னிப்​ப​தாகக் கருத்​தில் கொள்​ளக் கூடாது. மனிதர்​களின் செயல்​பாடு​களைக் கோடிட்டு காட்​டு​கிறோம்.

ந்​தக் கொலை வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு விதிக்​கப்​பட்ட மரண தண்​டனை சரி​யானது​தான் என்​பதை நிரூபிக்​கும் வகை​யில் தமிழக அரசு அழுத்​தம் கொடுத்து வாதிட​வில்​லை. எனவே, அந்த 7 பேருக்​கும் விதிக்​கப்​பட்ட மரண தண்​டனையை நாங்​கள் ஆயுள் தண்​டனை​யாகக் குறைக்​கிறோம். அதே​நேரம் கீழமை நீதி​மன்​றம் விதித்த அபராதம் செல்​லும். பொன்​னுச்​சாமி​யும், அவருடைய மனைவி மேரி புஷ்ப​மும் தமிழக ஆளுநரிடம் மன்​னிப்பு கோரும் மனுவை தாக்​கல் செய்ய அனு​ம​திக்​கிறோம்.

அவர்​களின் மன்​னிப்பு மனுவை பரிசீலிக்​கும்​படி ஆளுநரை​யும் கேட்​டுக் கொள்​கிறோம். ஆளுநர் பரிசீலிக்​கும் வரை அவர்​களுக்கு வி​திக்​கப்​பட்ட தண்​டனையை நிறுத்தி வைக்​கிறோம். எனவே விடு​தலை​யாகி வெளியே உள்ள பொன்​னுச்​சாமி, மேரிபுஷ்பம் தவிர எஞ்​சிய 7 பேரும் 2 வாரங்​களில் வி​சா​ரணை நீதி​மன்​றத்​தில்​ சரணடைய வேண்​டும்​. இவ்​வாறு உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.