























Updated on
:
1 min read
சென்னையில் மீண்டும் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புக்கொண்டபடி சிம்பு படம் நடித்து தரவில்லை என்ற பிரச்சினை எழுந்தது. இதனை முன்வைத்து பெப்சி அமைப்பு ,‘அரசன்’ படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது. இதனால் ‘அரசன்’ படப்பிடிப்பு தடைபட்டது.
தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, மீண்டும் சென்னையில் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்கியது. இதனை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய தொகையில் திரும்பி அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு. இதனால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。