





















Updated on:
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
29 வயதான ஸ்வெரேவ், டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதற்கு முன்பு வரை இவர் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பட்டம் வென்றது இல்லை. அமெரிக்க ஓபன் இறுதி, ஆஸ்திரேலிய ஓபன் இறுதி, விம்பிள்டனில் நான்காவது சுற்று வரை விளையாடி உள்ளார்.
இந்த சூழலில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு ஸ்வெரேவ் தகுதி பெற்றார். முன்னதாக, கடந்த 2024-ல் இதே பிரெஞ்சு ஓபன் இறுதியில் அவர் விளையாடி இருந்தார். இந்நிலையில், நேற்று இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலி உடன் இறுதிப் போட்டியில் விளையாடினார்.
மொத்தம் 5 செட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் ஸ்வெரேவ் வென்றார். 6-1, 4-6, 6-4, 6-7 (5/7), 6-1 என கோபோலியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் நாடு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜெர்மன் வீரர் ஆனார் ஸ்வெரேவ். கடைசியாக கடந்த கடந்த 1996 ஆஸ்திரேலிய ஓபனில் ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் பட்டம் வென்றிருந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。