

























சென்னை: ‘புதுக்கோட்டையில் பெண் ஒருவர் சமூக விரோதிகளால் வழி மறித்து, கடத்திச்சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சகித்துக் கொள்ள முடியாத குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’ என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், முதல்வர் விஜய் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” அமைக்க உத்தரவிட்டார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் காவல் சரகத்தில் உள்ள கிராமத்தில், தந்தையில்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் வாய்பேச முடியாத, செவித்திறனில்லாத 35-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஞாயிறு அன்று கூலி வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் போது சில சமூக விரோதிகளால் வழி மறித்து, கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சகித்துக் கொள்ள முடியாத குற்றச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。