惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog
Last Week in AI
Last Week in AI
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை இனி தொடரும்” - அமைச்சர் ராஜ...
வெற்றி மயிலோன் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: “இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு, இந்த வாழ்வு தமிழ் தந்தது. எனவே எப்போதும் தமிழுக்கே முதலிடம். ஒன்றிய அரசின் சுற்றறிக்கையின் படி வந்தே மாதரம் முதலில் பாடவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை கடைப்பிடிக்காமல், தமிழக அரசின் நிலைப்பாட்டின்படி தமிழ்த்தாய் வாழ்த்து இன்று முதலில் பாடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு கண்ணியமும், மாண்பும் இருக்கிறது. ஜனநாயகப்பூர்வமாக எதிர்க்கட்சிகள் அவர்களின் எதிர்வினையை ஆற்றலாம். இன்றைய தினத்தில் கூட திமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் எதிர்ப்பை காட்டலாம். ஆனால், அவர்கள் சென்ற ஆட்சியில் அப்படி வந்திருக்க வேண்டும். கொஞ்சம் கால தாமதமாக வந்துள்ளனர்.

பொது அமைதியையும், சட்டம் ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காக சிங்கப்பெண் சிறப்புப் படை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்கிறது. எனவே இந்த பேட்ஜ்களை அவர்கள் கடந்த ஆட்சியில் அணிந்து வந்திருக்க வேண்டும்.

இன்றைய ஆளுநர் உரை நல்ல முறையில் தொடங்கியுள்ளது. தொடக்கம் நல்ல முழக்கமாக இருக்கிறது. இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். 2024ல் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் பதியப்பட்டதாக சொல்கிறார்கள். இப்போது அதைவிட குற்றங்கள் குறைந்துள்ளன. காவல் நிலையங்கள் மீதான பாதுகாப்பு உணர்வு அதிகரித்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வெளியில் வருகின்றனர்.

இப்போதைய ஆட்சியில் எந்த பாரபட்சமும் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகபட்சமான தண்டனை பெற்றுத்தர வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும், சமூக நீதி கணக்காய்வை மாநில அரசு நடத்தும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார் முதல்வர் விஜய். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்துக்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” எனத் தெரிவித்தார்.