























மிர்பூர்: வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அசான் அவைஸ் 85, அப்துல்லா பாஸல் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 100.3 ஓவர்களில் 386 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சதம் அடித்த அசான் அவைஸ் 165 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்துல்லா பாஸல் 60, கேப்டன் ஷான் மசூத் 9, சவுத் ஷகீல் 0, சல்மான் ஆகா 58, முகமது ரிஸ்வான் 59, நோமன் அலி 2, ஷாகின் ஷா அப்ரிடி 13, ஹசன் அலி 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。