惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
小众软件
小众软件
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗
博客园_首页
D
DataBreaches.Net
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
U
Unit 42
爱范儿
爱范儿
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
M
MIT News - Artificial intelligence
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தவ் சிவசேனாவின் ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்? - கட...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

மும்பை: மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (யுபிடி) கட்​சி​யில் உள்ள எம்​.பி., எம்எல்​ஏ.க்​களை தங்​கள் பக்​கம் இழுக்க மகா​ராஷ்டிர துணை முதல்வர் ஏக்​நாத் ஷிண்​டே​வின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்​களாக முயன்று வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகின.

சிவசேனா கட்​சி​யின் (உத்​தவ்) எம்​எல்​ஏ.க்​களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டேவுடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், வரும் நாடாளு​மன்ற மழைக்காலக் கூட்​டத் தொடருக்கு முன்​பாக அவர்​கள் சிவசே​னா​வில் இணையக்கூடும் என்​றும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. சிவசேனா​வின் (ஏக்​நாத் ஷிண்​டே) இந்த நடவடிக்​கை, ஆபரேஷன் டைகர் என அழைக்​கப்​படு​கிறது.

இதனிடையே, கடந்த 14ம் தேதி முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்கரே கூட்​டிய அவசர ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மொத்தமுள்ள 9 மக்​களவை உறுப்​பினர்​களில் 5 பேர் கலந்து கொள்​ள​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இந்​தச் சூழ்​நிலை​யில், சிவசேனா (உத்​தவ்) எம்​.பி.க்​கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோ​ருடன் இணைந்து சஞ்​சய் ராவத் டெல்​லி​யில் செய்தியாளர்​களைச் சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: சிவசேனா எம்​.பி.க்​கள், எம்எல்ஏ.க்கள் யாரேனும் கட்​சியை விட்டு வெளியே செல்ல விரும்பி​னால் அவர்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு செல்லட்​டும். எங்​கள் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் குறித்து இது​போன்ற செய்​தி​கள் தற்​போது வரு​கின்​றன. இதற்கு அவர்​கள் விளக்​கம் அளிக்க வேண்​டும். இந்த எம்​.பி.க்​களின் வெற்​றிக்​காக எங்​கள் கட்சித் தலை​வர் உத்​தவ் தாக்​கரே ஓய்​வின்றி உழைத்​துள்​ளார். நாங்​கள் அவர்​களை சும்மா விட மாட்​டோம்.

கட்சி மாறும் எம்​.பி.க்​களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. மேலும், எம்​.பி.க்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.15 கோடி முன்​பண​மாகக் கொடுக்​கப்​பட்​டுள்​ள​தாக எனக்கு தகவல் கிடைத்​துள்​ளது. குறைந்​தது அவர்​களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்​களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்​படு​கிறது. மேலும் அவர்​களை அழைத்​துச் செல்ல 3 தனி விமானங்​களும் ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளன.

இந்த உத்​தர​வாதத்தை அடுத்தே அவர்​கள் நான்​டெட், புனே உட்பட 3 இடங்​களில் இருந்து தனி விமானம் மூலம் சென்​றுள்​ளனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்​துக்​குக் கூட தகு​தி​யானவர்​கள் கிடை​யாது. சிவசேனா கட்சி என்ற பெயர் காரண​மாகவே இவர்​களுக்கு இவ்வளவு மதிப்​பு. எங்​கள் கட்சி சார்​பில் கொறடா உத்​தரவு பிறப்பிக்​கப் ​பட்​டுள்​ளது. நாடாளு​மன்​றக் கட்​சிக் குழுக் கூட்டத்தை நாளை கூட்​டி​யுள்​ளோம். இந்​தக் கூட்​டத்​தில் பங்கேற்காத எம்​.பி.க்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். எங்​கள் கட்​சி​யின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்​பாக மக்​களவை சபா​நாயகருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.