惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
V
Visual Studio Blog
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
Docker
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
云风的 BLOG
云风的 BLOG
美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இராக் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றில...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

பிலடெல்பியா: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வின் பிலடெல்​பி​யா​வில் உள்ள லிங்​கன் ஃபைனான்சியல் ஃபீல்டு மைதானத்​தில் நேற்று ‘ஐ’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் பிரான்ஸ் - இராக் அணி​கள் மோதின.

14-வது நிமிடத்​தில் பிரான்ஸ் அணி முதல் கோலை அடித்​தது. வலது பக்​கத்​தில் இருந்து ஒலிஸே​விடம் இருந்து பந்​தைப் பெற்று நட்​சத்​திர வீர​ரான கிலியன் எம்​பாப்பே அடித்த மின்​னல் வேக ஷாட் கோல் வலையை துளைத்​தது. தனது 100-வது ஆட்​டத்​தில் எம்பாப்வே அடித்த இந்த கோலால் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்​றது.

54-வது நிமிடத்​தில் இராக் அணி​யின் டிஃபெண்​டரிட​மிருந்து வந்த ஒரு சுமா​ரான ஷார்ட் கோல்​-கிக்கை கோல்​கீப்​பர் பாசில் சரியாகக் கையாளாமல் தடு​மாறி​னார். அதைச் சாதக​மாக்​கிக் கொண்ட பிரான்ஸ் வீரர்​கள், பந்தை லாவக​மாகப் பறித்​து, உஸ்மான் டெம்​பேலே​விடம் கொடுத்​தனர். அவர். அதை நேர்த்தியாக எம்​பாப்​பேயை நோக்​கித் தட்​டி​விட, எம்​பாப்பே எவ்வித சிரம​மும் இன்றி பந்தை கோல் வலைக்​குள் தள்ளி அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என முன்​னிலை வகித்தார்.

66-வது நிமிடத்​தில் வலது பக்​கத்​தில் ஒலிஸே மிக நேர்த்​தி​யாகப் பந்​தைச் செலுத்தி டெம்​பேலேவை நோக்கி நகர்த்த, அதை மின்னல் வேகத்​தில் வாங்​கிய அவர், கோல்​கீப்​பர் பாசிலைத் தாண்​டி, கோல் வலை​யின் இடது கார்​னரை நோக்கி திணித்​தார். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என வலு​வான முன்​னிலையை நோக்கி நகர்ந்​தது. கடைசி வரை போராடிய போதி​லும் இராக் அணி​யால் ஒரு கோல் கூட அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

பிரான்ஸ் அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் செனகலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்​தி​யிருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் பிரான்ஸ் அணி 6 புள்​ளி​களு​டன் நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறியது. இராக் அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது.

2 மணி நேரம் தாமதம்

இராக் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தின் 37-வது நிமிடத்​தில் பிரான்ஸ் அணி 1-0 என முன்​னிலை பெற்​றிருந்த நிலை​யில் மழை பெய்​தது. எனினும் ஆட்​டம் தொடர்ந்து நடை​பெற்​றது. முதல் பாதி ஆட்​டம் முடிவடைந்த நிலை​யில் பலத்த மழை​யும் இடி​யுடன் கூடிய புயலும் வந்​த​தால் ஆட்​டம் தடைபட்​டது.

பலத்த மழை கொட்​டித் தீர்த்​த​தால், ரசிகர்​கள் அனை​வரும் மைதானத்​தின் உள்​பகு​தி​யில் பால்​க​னிகளி​லும் தஞ்​சமடைந்தனர். நிலைமை சீரடைந்த பின்​னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்​னர் ஆட்​டம் மீண்​டும் நடை​பெற்​றது.

மிரோஸ்​லாவ் சாதனை சமன்

பிரான்ஸ் அணி​யின் நட்​சத்​திர வீர​ரான 27 வயதாகும் கிலியன் எம்​பாப்​பே, இராக் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 2 கோல்​கள் அடித்து அசத்​தி​னார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக கோல்​கள் அடித்து 2-வது இடத்​தில் உள்ள ஜெர்​மனி​யின் மிரோஸ்​லாவ் குளோஸ் (16 கோல்​கள்) சாதனையை சமன் செய்​தார்.

அதேவேளை​யில் பிரேசில் ஜாம்​ப​வான் ரொனால்​டோ​வின் (15 கோல்​கள்) சாதனையை முறியடித்​தார். இந்த வகை சாதனை​யில் அர்​ஜெண்​டி​னா​வின்​ லயோனல்​ மெஸ்​ஸி 18 கோல்​களு​டன்​ முதலிடத்​தில்​ உள்​ளார்​.