

























Updated on
:
1 min read
சென்னை: “மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 34 தொகுதிகளில் வெற்றியும், 77 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 76 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 50 தொகுதிகளும் மட்டுமே வசமாகியுள்ளன.
இதனிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 62,992 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட செல்வம் 55,852 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம் தொகுதி மக்களுக்காக இன்னும் கடுமையாக பணியாற்றுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。