惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
美团技术团队
小众软件
小众软件
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசியல் கட்சிகள் சார்பில் மே தினம் கொண்டாட்டம்: செங்கொடி ...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் மே தினம் நேற்று உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது. கட்சி அலு​வல​கங்​களில் செங்​கொடி ஏற்றி தொழிலா​ளர்​களுக்கு இனிப்பு வழங்​கப்​பட்​டது.

திமுக சார்​பில் மே தின விழா சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள மே தினப் பூங்​கா​வில் கொண்​டாடப்​பட்​டது. இதில் திமுக தலை​வரும் தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​றி​னார்.

முன்​ன​தாக, அங்​குள்ள நினை​வுச் சின்​னத்​தில் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, பி.கே.சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன், சி.​வி.கணேசன், ஆர்​.​ராஜேந்​திரன், மேயர் ஆர்​.பிரி​யா, ஆ.ரா​சா, டி.கே.எஸ்​.இளங்​கோவன், பூச்சி முரு​கன் உள்​ளிட்ட கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரளாக கலந்​து​கொண்​டனர். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில தலைமை அலு​வல​கத்​தில் கட்​சி​யின் தேசிய நிர்​வாகக்​குழு உறுப்​பினர் டி.எம்​.மூர்த்தி தலை​மை​யில் மே தின விழா நடந்​தது.

கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் செங்​கொடியை ஏற்​றி​னார். நிகழ்ச்​சி​யில் மாநில துணைச் செய​லா​ளர் என்​.பெரிய​சாமி, மாநில செயற்​குழு உறுப்​பினர் வகிதா நிஜாம், டாக்​டர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற மே தின விழா​வில் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் ஜி.​ராமகிருஷ்ணன் மே தின செங்​கொடியை ஏற்​றி​னார்.

நிகழ்ச்​சி​யில் மத்​தி​யக் குழு உறுப்​பினர் என்​.குணசேகரன், மாநில செயற்​குழு உறுப்​பினர் கே.​சா​முவேல்​ராஜ், தென்​சென்னை மாவட்​டச் செய​லா​ளர் ஆர்​.வேல்​முரு​கன், மாநிலக் குழு உறுப்​பினர்​கள் பி.சுகந்​தி, வெ.​ராஜசேகர், வில்​சன். கே.சர​வணன், சிந்​தன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மே தினத்தையொட்டி மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ எழும்​பூரில் உள்ள மதி​முக தலைமை அலு​வல​க​மான தாயகத்​தில் மே தின கொடியேற்றி தொழிலா​ளர்​களுக்கு இனிப்பு வழங்​கி​னார்.

நாம் தமிழர் கட்​சி​யின் தொழிற்​சங்​கப் பேரவை சார்​பில் வளசர​வாக்​கத்​தில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​க​மான இராவணன் குடிலில் உழைப்​பாளர் விழா கொண்​டாடப்​பட்​டது.

தமாகா சார்​பில் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற விழா​வில் கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

அமைப்பு சாரா தொழிலா​ளர் கூட்​டமைப்பு சார்​பில் மெரினா கடற்​கரைச் சாலை​யில் உள்ள உழைப்​பாளர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. தொடர்ந்து மே தின உறு​தி​மொழியேற்பு கூட்​டம் நடந்​தது.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வெளி​யிட்ட மே தின வாழ்த்​துச் செய்​தி​யில், ``சமதர்​மம், சமூகநீ​தி, சமத்​து​வம் அடிப்​படை​யில் உண்​மை​யில் உழைப்​போருக்கு இந்த ஜனநாயக நாட்​டில் உரிய மரி​யாதை​யும், அங்​கீ​கார​மும் கிடைக்க வேண்​டும்'' என்று கூறி​யுள்​ளார்.

அதே​போல், மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ஹாசன் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில், ``காடு திருத்தி நாடாக்​கியது உழைப்​பு, உண்​ணத் தந்து உயிர்​கொடுப்​பது உழைப்​பு, உலக மாந்​தரை ஒன்​றாக்​கியது உழைப்​பு, உழைப்பு இல்​லை​யேல் உயிர் இல்லை உயர்​வில்லை உழைப்​பையே மூச்​சாய்​ கொண்​ட உழைப்​பாளருக்​கு என்​ வணக்​கம்​'' என்​று குறிப்​பிட்​டுள்​ளார்​.