惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Heimdal Security Blog
P
Privacy International News Feed
S
Schneier on Security
P
Proofpoint News Feed
L
Lohrmann on Cybersecurity
Spread Privacy
Spread Privacy
P
Privacy & Cybersecurity Law Blog
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
Scott Helme
Scott Helme
K
Kaspersky official blog
大猫的无限游戏
大猫的无限游戏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
aimingoo的专栏
aimingoo的专栏
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
S
Securelist
Help Net Security
Help Net Security
B
Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Security Archives - TechRepublic
Security Archives - TechRepublic
云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
N
News and Events Feed by Topic
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
博客园 - 司徒正美
V
V2EX
AWS News Blog
AWS News Blog
Know Your Adversary
Know Your Adversary
N
News | PayPal Newsroom
T
Tor Project blog
Cisco Talos Blog
Cisco Talos Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
PCI Perspectives
PCI Perspectives
Google DeepMind News
Google DeepMind News
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
U
Unit 42
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
P
Palo Alto Networks Blog
G
Google Developers Blog
T
Threat Research - Cisco Blogs
博客园 - Franky
I
InfoQ
D
DataBreaches.Net
爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி?
பெ.மாரிமுத்து · 2026-04-12 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி​யின் கேப்​டன் அக்​சர் படேல் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார்.

பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 61 ரன்​கள் குவித்​தது. நிதான​மாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 18 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் படேல் பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் தூக்கி அடித்த போது பதும் நிசங்​கா​விடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார். 10 ஓவர்​களின் முடி​வில் சிஎஸ்கே 88 ரன்​கள் சேர்த்​தது. நடராஜன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை ஆயுஷ் மாத்ரே பவுண்​டரிக்கு விரட்ட ஃபுல்​டா​சாக வீசிய 3-வது பந்தை சஞ்சு சாம்​சன் டீப் மிட் விக்​கெட் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இந்த ஓவரில் மட்​டும் 15 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.

நடராஜன் வீசிய 15-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே சிக்​ஸர் ஒன்றை விளாச, சஞ்சு சாம்​சன் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விரட்​டி​னார். இந்த ஓவரில் 19 ரன்​கள் விளாசப்​பட்​டன. சிறப்​பாக விளை​யாடி வந்த ஆயுஷ் மாத்ரே 36 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரிட்​டயர்டு அவுட் முறை​யில் வெளி​யேறி​னார். அப்​போது சிஎஸ்கே 17 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்​திருந்​தது. 2-வது விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சனுடன் இணைந்து ஆயுஷ் மாத்ரே 67 பந்​துகளில், 113 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்​கி​னார். அதிரடி​யாக விளை​யாடிய சஞ்சு சாம்​சன் 52 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இது அவரது 4-வது சதமாக அமைந்​தது.

லுங்கி நிகிடி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே பவுண்​டரிக்கு விரட்ட கடைசி பந்தை சஞ்சு சாம்​சன் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விரட்டி அசத்​தி​னார். 20 ஓவர்​கள் முடி​வில் சிஎஸ்கே அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் குவித்​தது. சஞ்சு சாம்​சன் 56 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 15 பவுண்​டரி​களு​டன் 115 ரன்​களும், ஷிவம் துபே 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸர்​, 2 பவுண்​டரி​களு​டன்​ 20 ரன்​களும்​ விளாசி ஆட்​ட​மிழக்​காமல்​ இருந்தனர்.

213 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பதும் நிஷங்​கா, கே.எல்​.​ராகுல் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. கே.எல்​.​ராகுல் 10 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் கலீல் அகமது வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்​கெட் திசை​யில் நின்ற ஜேமி ஓவர்​டனிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு கே.எல்​.​ராகுல், பதும் நிஷங்கா ஜோடி 5 ஓவர்​களில் 61 ரன்​கள் சேர்த்​தது.

மட்​டையை சுழற்​றிய பதும் நிஷங்கா 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​கள் எடுத்த நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் மிட் ஆன் திசை​யில் டெ​வால்ட் பிரே​விஸிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் அக்​சர் படேல் ஒரு ரன் எடுத்த நிலை​யில் குர்​ஜப்​னீத் சிங்​கின் பந்​து​வீச்​சில் சர்ஃப​ராஸ் கானின் அற்​புத​மான கேட்ச் காரண​மாக நடையை கட்​டி​னார். கடந்த சில ஆட்​டங்​களில் அதிரடி​யாக விளை​யாடிய சமீர் ரிஸ்வி 9 பந்​தில் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் விளாசிய போது டெவால்ட் பிரே​விஸிடம் கேட்ச் ஆனது.

இதன் பின்​னர் டேவிட் மில்​லர் 14 பந்​துகளில், 17 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் போல்​டா​னார். இம்​பாக்ட் பிளேயர் விதி​யின் கீழ் களமிறங்​கிய அதிரடி வீர​ரான அஷுதோஷ் சர்மா 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் நூர் அகமது பந்​தில் டீப் பாயிண்ட் திசை​யில் அன்​ஷுல் கம்​போஜிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். அவரைத் தொடர்ந்து ஆகிப் நபி 4ரன்​களில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

16 ஓவர்​களில் டெல்லி அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​திருந்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், குல்​தீப் யாதவ் ஆகியோர் களத்​தில் இருந்த நிலை​யில் கடைசி 4 ஓவர்​களில் டெல்லி அணி​யின் வெற்​றிக்கு 57 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

சீராக ரன்​கள் சேர்த்த டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 30 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். இது அவரது 4-வது அரைசத​மாக அமைந்​தது. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 18-வது ஓவரில் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். கடைசி 2 ஓவர்​களில் டெல்லி அணி​யின் வெற்​றிக்கு 32 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இந்த ஓவரின் 3-வது பந்தை

டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் மிட் ஆஃப் திசை​யில் அடித்த போது நூர் அகமது​விடம் கேட்ச் ஆனது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 38 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரிகளு​டன் 60 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து லுங்கி நிகிடி களமிறங்​கி​னார். எஞ்​சிய 3 பந்துகளையும் சிறப்​பாக வீசிய ஜேமி ஓவர்​டன் வெறும் 4 ரன்களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். அன்ஷுல் கம்​போஜ் வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணி​யின் வெற்​றிக்கு 28 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் பந்​தில் குல்​தீப் யாதவ் (4) ஆட்டமிழந்தார். இதையடுத்து நடராஜன் களமிறங்​கி​னார். கடைசி பந்​தில் லுங்கி நிகிடி (3) சிலிப் திசை​யில் குர்​ஜப்​னீத் சிங்கிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

20 ஓவர்​களின் முடி​வில் டெல்லி அணி 189 ரன்​களுக்கு அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்​தது. இதனால் சிஎஸ்கே அணி 23 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. சிஎஸ்கே தரப்​பில் ஜேமி ஓவர்​டன் 4 ஓவர்​களை வீசி 18 ரன்​களை விட்​டுக் ​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். அன்​ஷுல் கம்​போஜ் 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். கலீல் அகமது, குர்​ஜப்​னீத் சிங், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

சிஎஸ்​கேவுக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்​தது. 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. டெல்லி அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள்​ பெற்​று பட்​டியலில்​ 4-வது இடத்​தில்​ உள்ளது.

>​முதல் முறை​யாக.. டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் தொடக்க ஜோடி​யான சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 38 பந்​துகளில், 62 ரன்​கள் சேர்த்​தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தற்​போது​தான் முதல் விக்​கெட்​டுக்கு அதிக ரன்​கள் சேர்த்​துள்​ளது. முதல் 3 ஆட்​டங்​களி​லும் சிஎஸ்கே அணி​யின் தொடக்க ஜோடி முறையே 14, 14 மற்​றும் 9 ரன்​களே சேர்த்து இருந்​தது.

>52 ரன்​னில் தப்​பித்த சாம்​சன்: சஞ்சு சாம்​சன் 52 ரன்​கள் எடுத்​திருந்த போது அக்​சர் படேல் வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தை லாங் ஆஃப் திசை​யில் அடித்த போது பதும் நிஷங்கா கேட்ச் செய்​யத் தவறி​னார். இந்தை வாய்ப்பை சரி​யாக பயன்​படுத்​திக் கொண்ட சாம்​சன் 56 பந்​துகளில் 115 ரன்​கள் விளாசி அசத்​தி​னார்.

>சதம் அடித்த 2-வது சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் தொடரில் நேற்று சேப்​பாக்​கத்​தில் டெல்லி அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் சஞ்சு சாம்​சன் 115 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். இதன் மூலம் டெல்லி அணிக்கு எதி​ராக சதம் அடித்த 2-வது சிஎஸ்கே வீரர் என்ற பெரு​மையை சஞ்சு சாம்​சன் பெற்​றார். இதற்கு முன்​னர் 2012-ம் ஆண்டு இதே மைதானத்​தில் முரளி விஜய் 113 ரன்​கள் எடுத்​திருந்​தார்.

>6-வது வீரர்: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் ஆயுஷ் மாத்ரே 59 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரிட்​டயர்டு அவுட் முறை​யில் வெளி​யேறி​னார். ஐபிஎல் வரலாற்​றில் இது​போன்று ரிட்​டயர்டு அவுட் முறை​யில் வீரர் ஒரு​வர் ஆட்​ட​மிழந்து வெளி​யேறு​வது இது 6-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 2022-ல் அஸ்​வின் (28), 2023-ல் அதர்வா டைடு (55), சாய் சுதர்​சன் (43), 2025-ல் திலக் வர்மா (25), டேவன் கான்வே (69) ஆகியோர் ரிட்​டயர்டு அவுட் முறை​யில் வெளி​யேறிருந்​தனர்.

>63-வது பந்​தில் முதல் சிக்ஸ்: டெல்லி அணிக்கு எதி​ராக நேற்று சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 62 பந்​துகளுக்கு பிறகு முதல் சிக்​ஸரை அடித்​தது.

>2026-ல் முதல் சதம்: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் சஞ்சு சாம்​சன் சதம் விளாசி​னார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்​கப்​பட்ட முதல் சதம் இது​வாகும். 2026-ம் ஆண்டு தொடரில் 18-வது ஆட்​டத்​தில் முதல் சதம் அடிக்​கப்​பட்​டுள்​ளது.

>‘படையப்பா’ ரஜினி பாணி​யில் சல்​யூட்: சதம் அடித்த மகிழ்ச்​சியை சஞ்சு சாம்சன், படையப்பா படத்​தில் நடிகர் ரஜினி​காந்த் ஸ்டைலாக அடிக்​கும் சல்​யூட் போன்று சல்​யூட் அடித்து காண்​பித்​தார். இது ரசிகர்​களை வெகு​வாக கவர்ந்​தது.

>3 முறை தப்​பித்த ஆயுஷ் மாத்ரே: ஆயுஷ் மாத்ரே 9 ரன்​களில் இருந்த போது ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்​தார். இதன் பின்​னர் அவர், 23 ரன்​னில் கொடுத்த கேட்ச்சை குல்​தீப் யாத​வும், 54 ரன்​களில் இருந்​த போது கொடுத்​த கேட்ச்​சை டேவிட்​ மில்​லரும்​ தவறவிட்டனர்.

>32 ஆயிரம் ரசிகர்கள்: நேற்று போட்டியை காண்பதற்காக மைதானத்தில் சுமார் 32,144 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.