惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
博客园_首页
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
博客园 - 聂微东
IT之家
IT之家
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
博客园 - Franky
V
V2EX
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சேலம் / சென்னை: சேலத்​தில் பெண்​களை ஆபாச​மாக படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​பட்ட தவெக பிர​முகரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் அவரிடம் இருந்து கைப்​பற்​றப்​பட்ட பென் டிரை​வ்வில் சிக்​கிய வீடியோக்களின் அடிப்படையில் கொண்​டலாம்​பட்டி போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

சேலத்​தைச் சேர்ந்த இளம் பெண் சமூக வலை தளங்​களில் கண்​ணீர் மல்க பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அதில், சேலம் நெய்க்​காரப்​பட்​டியைச் சேர்ந்த தவெக பிர​முகர் மணி​கண்​டன் 50-க்​கும் மேற்பட்டபெண்​களை ஆபாச​மாக வீடியோஎடுத்து மிரட்டி வரு​கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அதில் கோரி​யிருந்​தார்.

இதுசம்​பந்​த​மாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணை​யர் அனில்​கு​மார் கிரி, கொண்​டலாம்​பட்டி போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டார். இதன்​பேரில், காவல் உதவி ஆணை​யர் முரளி,காவல் ஆய்​வாளர் சிலம்​பரசன் தலை​மையி​லான போலீ​ஸார் தவெக பிர​முகர் மணி​கண்​டனைபிடித்து விசா​ரணை நடத்​தினர்.

அவரின் செல்​போன் மற்​றும் பென் டிரைவ் ஆகிய​வற்றை கைப்​பற்றி ஆய்வு செய்​த​தில், மணி​கண்​டன் 3 பெண்​களு​டன் ஆபாச​மாக இருக்​கும் வீடியோ காட்சி பதி​வாகி இருந்​தது. வீடியோ காட்​சி​யில் பதி​வாகி​யிருந்த 32 வயது பெண் ஒருவர் நேரடி​யாக கொண்​டலாம்​பட்டிகாவல் நிலை​யத்​துக்கு வந்து மணி​கண்​டன் மீது புகார் கொடுத்​தார்.

பெண்​களை பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​படுத்​திய மணி​கண்​டனை கொண்​டலாம்​பட்டி போலீ​ஸார் கைது செய்​தனர். அவர் மீது பெண்​ணின் கண்ணி​யத்​துக்கு களங்​கம் ஏற்​படுத்​து​வது, பாலியல் தொந்​தரவு கொடுத்​தது, கட்​டாயப்​படுத்தி ஆபாச​மாக படம் எடுத்​தது என 8 பிரிவு​களின்கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். பின்னர் நீதி​மன்​றத்​தில் அவரை ஆஜர்​படுத்தி சேலம் மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

பாலியல் வழக்​கில் சிக்கி கைதாகி​யுள்ள மணி​கண்​டன் தவெகவில் இருந்து செயல்​பட்டு வந்த நிலை​யில், அவர் மீது பல்​வேறு புகார்​கள் வந்த நிலை​யில் கட்சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். இதுதொடர்​பாக சேலம் தெற்கு மாவட்ட செய​லா​ளர் ஆர்​.எஸ்​.மணி​கண்​டன் விடுத்​துள்ள செய்திக் குறிப்​பில், தவெகவுக்​கும் பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​பட்​ட​தாக கைது செய்​யப்​பட்​டுள்ள சேலம் நெய்க்​காரப்​பட்டி சின்​னபுத்​தூரைச் சேர்ந்த எம்​.மணி​கண்​ட​னுக்​கும் எவ்​வித தொடர்​பும் கிடை​யாது எனத் தெரி​வித்​துள்​ளார்​.

இந்​நிலை​யில் இந்தச் சம்​பவத்​துக்கு தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: பெண்​களை இப்​படி வெறும் சதைப் பிண்​டங்​களாக மட்​டுமே பாவிக்​கும் மனித மிரு​கங்​களுக்கு கட்​சி​யில் பொறுப்பு வழங்கி பாது​காத்​துக் கொண்​டிருக்​கும் முதல்​வர் விஜய், தமிழகப் பெண்​களின் பாது​காப்பை எப்​படி உறுதி செய்​வார். பெண்​களைக் காக்க சிங்​கப்​பெண் சிறப்​புப் படை அமைத்​துள்​ள​தாக விளம்​பரம் தேடும் முதல்​வர், தனது கட்சி நிர்​வாகி​களிடம் இருந்து பெண்​களை பாது​காக்க என்ன படை அமைக்​கப் போகிறார்?

திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்.பி.: பொள்​ளாச்சி வன்​கொடுமை சம்​பவத்தை அதி​முக அரசு மூடி மறைக்க முயன்​றதைப் போல, இந்த கொடுஞ்​செயலில் ஈடு​பட்டகுற்​ற​வாளி​களைக் காப்​பாற்ற முய​லாமல், உரிய விசா​ரணை மேற்​கொண்டு தண்​டனை பெற்​றுத் தர வேண்​டும். பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு பாது​காப்​பை​யும் உரிய நீதி​யும் கிடைக்க வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: மணி​கண்​டன் பெண்​களை மிரட்டி பாலியல் வணி​கத்​தில் தள்​ளி​யுள்​ள​தால் இதன் பின்​புல​மாக மேலும் பலர் இருக்​கக்கூடும் என்ற சந்​தேகம் எழுகிறது. எனவே, இவ்​வழக்கை உடனடி​யாக சிபிசிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட்டு குற்​ற​வாளி​கள் யாராக இருந்​தா​லும் கைது செய்து உரிய தண்டனை பெற்​றுத் தர வேண்​டும்​.

அமமுக பொதுச் செய​லா​ளர்டிடிவி தினகரன்: பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​வோம் என சூளுரைத்த முதல்​வர் விஜய், தன் கட்சி நிர்​வாகி​களுக்கு பெண்​களின் பாது​காப்பு குறித்​தும் அவர்​களின் கண்​ணி​யம் குறித்​தும் அறி​வுரை வழங்​கத் தவறியது ஏன்?