惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
D
Docker
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
爱范儿
爱范儿
H
Help Net Security
美团技术团队
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
G
Google Developers Blog
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
497 மண்டகப்படிகளில் எழுந்தருளிவிட்டு அழகர்கோவிலை அடைந்தார...
செய்திப்பிரிவு · 2026-05-06 · via hindutamil

சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று மதுரை விஜயத்தை முடித்து அழகர்கோவில் திரும்பிய கள்ளழகரை தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். உள்படம்: கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளிய கள்ளழகர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on: 

மதுரை: கள்​ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி அழகர்​கோ​விலில் இருந்து புறப்​பட்டு மதுரைக்​குச் சென்று திரும்​பிய​போது கள்​ளழகர் 497 மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி பல லட்​சம் பக்​தர்​களுக்கு தரிசனம் அளித்​து​விட்டு நேற்று கோயிலை அடைந்​தார். அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் மலர் தூவி வரவேற்​றனர். 21 பெண்​கள் பூசணிக்​கா​யில் தீபமேற்றி கள்​ளழகருக்கு திருஷ்டி கழித்​தனர்.

அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா கடந்த ஏப்​.27-ம் தேதி தொடங்​கியது. மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க சுந்​தர​ராஜப்​பெரு​மாள், கள்​ளர் திருக்​கோலத்​தில் ஏப்​.29-ல் மலை​யி​லிருந்து மதுரைக்கு புறப்​பட்​டார். மே 1-ம் தேதி அதி​காலை 5.48 மணிக்கு பச்​சைப் பட்டு உடுத்தி கள்​ளழகர் தங்​கக் குதிரை​யில் வைகை ஆற்​றில் இறங்​கி​னார்.

மே 2-ம் தேதி தேனூர் மண்​டபத்​தில் மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்​தார். மே 4-ம் தேதி தல்​லாகுளம் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபத்​தில் அதி​காலை 2 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் எழுந்​தருளி அழகர்​மலைக்​குத் திரும்​பி​னார்.

அன்​றிரவு சுந்​தர​ராஜன்​பட்டி மறவர் மண்​டபத்​தில் கள்​ளழகர் பயணத்​தால் ஏற்​பட்ட உடல் களைப்பை போக்​கும் வகை​யில் அபிஷேகம், ஆராதனை நடந்​தது. ஒன்​ப​தாம் நாளான நேற்று (மே 5) காலை 10.40 மணி​யள​வில் கோட்டை வாசல் பகு​தி​யில் நுழைந்​தார்.

அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ என கோஷமிட்​டு, கள்​ளழகரை மலர்​ தூவி வரவேற்​றனர். பின்​னர் கருப்​பண​சாமி கோயி​லில் தீபா​ராதனை முடிந்து கோயிலுக்​குள் நுழைந்​த​போது 21 பெண்​கள் பூசணிக்​கா​யில் கற்​பூர தீபமேற்றி கள்​ளழகருக்கு திருஷ்டி கழித்​தனர்.

சுந்​தர​வல்​லித்​தா​யார் யானை வரவேற்​ற​நிலயில் கோயிலுக்​குள் சென்று இருப்​பிடம் சேர்ந்​தார். 10-ம் நாளான இன்று (மே 6) உற்சவ சாற்​று​முறை​யுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரி ஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் விரிவாக செய்​துள்ளனர்.