惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
Vercel News
Vercel News
D
DataBreaches.Net
MongoDB | Blog
MongoDB | Blog
H
Help Net Security
小众软件
小众软件
美团技术团队
T
The Blog of Author Tim Ferriss
爱范儿
爱范儿
D
Docker
Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
罗磊的独立博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
S
SegmentFault 最新的问题
云风的 BLOG
云风的 BLOG
B
Blog
雷峰网
雷峰网
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தென் கொரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றில் கால்பதித்தது ம...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

குவாடலஹாரா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று குவாடலஹாராவில் உள்ள எஸ்டாடியா அக்ரான் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெக்சிகோ - தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

50-வது நிமிடத்தில் தென் கொரிய அணியின் தற்காப்பு அரணின் இமாலயத் தவற்றைப் பயன்படுத்தி, மெக்ஸிகோ அணி முதல் கோலை அடித்தது. இதுவே அந்த அணியின் வெற்றி கோலாகமாகவும் அமைந்தது.

மெக்ஸிகோ வீரர் குவினோனெஸ், தென் கொரியாவின் கிம் மூன்-ஹவானை மிக லாவகமாக முந்திச் சென்று, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி துல்லியமான கிராஸை அடித்தார். அங்கே தயாராக நின்ற மெக்ஸிகோ நட்சத்திரம் ரவுல் ஜிமினெஸ், தென் கொரியாவின் டிஃபென்டர் கிம் மின்-ஜேவுடன் அந்தரத்தில் போராடியபடி பந்தைத் தலையால் முட்டி காற்றில் உயர்த்தினார்.

அப்போது தென் கொரிய அணியின் கோல்கீப்பர் கிம் சியுங்-கியு பந்தைப் பிடிக்கத் தனது கோட்டை விட்டு முன்னோக்கிப் பாய்ந்து வந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பந்தைக் கையாள்வதில் தடுமாறிய கோல்கீப்பர், தனது சொந்த அணியின் டிஃபென்டர் லீ கி-ஹியுக் மீது மோதியவாறு தவறவிட்டார்.

அந்த நேரம் அங்கே தளர்வாக வந்த பந்தைக் குறிபார்த்துக் காத்திருந்த மெக்ஸிகோவின் லுயிஸ் ரோமோ காலியாக இருந்த கோல் வலைக்குள் திணித்தார். இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் தென் கொரியா போட்டியைச் சமன் செய்யப் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெக்ஸிகோ கோல்கீப்பர் ரவுல் ரான்கெல் அற்புதமாக செயல்பட்டு அதை முறியடித்தார். தென் கொரியாவின் நட்சத்திர வீரர் சோ குவே-சுங் மிகக் குறுகிய தூரத்திலிருந்து இலக்கை நோக்கி தலையால் முட்டிய பந்தை மெக்சிகோ கோல்கீப்பர் ரான்கெல் மிகச் சிறப்பாகத் தடுத்தார்.

ஆனால், பந்து அவர் மீது பட்டு மீண்டு வந்து தென் கொரியாவின் யாங் ஹியூன்-ஜுன் கால்களில் விழுந்தது. அவர், உடனே பந்தை கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். அப்போது கோல்கீப்பர் ரான்கெல், தரையில் படுத்தவாறே தனது வலது கையை அசாத்தியமான வேகத்தில் நீட்டி பந்து கோல் கோட்டைத் தாண்டாதவாறு தடுத்து நிறுத்தினார்.

முடிவில் மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. மெக்சிகோ அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளின் மூலம் மெக்சிகோ அணி 6 புள்ளிகளுடன் நடப்பு தொடரில் முதல் அணியாக 32 அணிகள் கலந்து கொள்ளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.