惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
The Cloudflare Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
V
Visual Studio Blog
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
IT之家
IT之家
G
Google Developers Blog
V
V2EX
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் பெரும்பாலான குளம்,...
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்று உபரிநீரை நீரேற்று நிலையங்கள் மூலம் தண்ணீர் எடுத்து அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள வறட்சிப் பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் 70 ஆண்டுகால கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியின் போது இந்தத் இட்டத்துக்காக ரூ.1,756 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்து 2024 ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு 5 சதவீதம் நீர் கூட வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அத்திக்கடவு- அவிநாசி திட்ட பாதுகாப்புக் குழு நிர்வாகி முருக பூபதி கூறியதாவது: இந்தத் திட்டத்தில் 1,045 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன. இதற்காக மொத்தம் 6 நீரேற்று நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் 5, 6-வது நீரேற்று நிலையங்களில் மட்டுமே 600-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் இருக்கின்றன. அவற்றில் 20 சதவீத குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் ஓரளவுக்கு வந்திருக்கிறது.

80 சதவீதம் குளங்களுக்கு S சதவீதம் கூட தண்ணீர் செல்லவில்லை. காரணம் திட்டத்தின் வடிவமைப்பிலேயே பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப் பராமரிக்கும் தனியார் நிறுவனமும் முழு கவனம் செலுத்தவில்லை. ஆண்டில் 70 நாட்கள் தான் ஆற்றில் இருந்து இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. அப்போதும் கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்குக் காலத்திலாவது 24 மணி நேரமும் தண்ணீர் வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6 நீரேற்று நிலையங்களும் ஒரே நேரத்தில் செயல்பட்டால்தான், தண்ணீர் ஒன்றாவது நிலையத்தில் இருந்து, 6-வது நிலையம் வரை செல்லும். இவற்றில் ஏதாவது ஒரு நிலையத்தில் பிரச்சினை என்றாலும் ஒட்டுமொத்தமாக 6 நீரேற்று நிலையங்களும் செயல்படாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைகளையெல்லாம் அரசு சரி செய்ய வேண்டும். கடந்த மாதம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

அப்போதுகூட அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கவில்லை. மழைக்காலம் தொடங்கினால், பவானி ஆற்றில் உபரிநீர் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் குழாய். மோட்டார். பழுதுகளை சீரமைத்து திட்டத்துக்கான 1.5 டிஎம்சி தண்ணீரையும் எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து இத்திட்ட பொறியாளர்கள் கூறியதாவது: அத்திக் கடவு- அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்.சி தண்ணீர் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 1.3 டிஎம்சி கொடுத்துவிட்டோம். இதனால் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்திருக்கின்றனர். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 70 நாட்கள் தண்ணீர் கொடுப்பதுதான் திட்டம்.

தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருந்ததால் பவானி ஆற்றில் கிடைத்த உபரிநீர் மூலம் தற்போதுவரை 811 குளங்களுக்குத் தண்ணீர் கொடுத்திருக்கிறோம். மீதியுள்ள 235 குளங்களுக்கு விரைவில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 70 நாட்கள் தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதியுள்ள 10 மாதங்கள் 6 நீரேற்று நிலையங்களும் செயல்படாமல் இருப்பதால் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து வருகிறோம். என்றனர்.