惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
V
Visual Studio Blog
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
Docker
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
云风的 BLOG
云风的 BLOG
美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்திய பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அ...
2026-05-01 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: வரும் 2030-ம் ஆண்​டுக்குள் இந்​திய பொருளா​தா​ரத்தை இரண்டு மடங்​காக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக, மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் வி.அனந்த நாகேஸ்​வரன் தெரி​வித்​தார்.

ஐஐடி நிறுவன விழா

மத்​திய அரசின் முன்​னணி உயர் தொழில்​நுட்ப கல்வி நிறு​வனங்​களில் ஒன்​றான சென்னை ஐஐடி​யின் 67-வது ஆண்டு நிறுவன விழா, ஐஐடி வளாகத்​தில் உள்ள மாணவர் செயல்​பாட்டு மைய கலை​யரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில், மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் சிறப்பு விருந்​திரன​ராக கலந்​துக் கொண்டு பேசி​ய​தாவது: இந்தியாவில் தகவல் தொழில்​நுட்​பத்​துறை ஆண்​டுக்கு 50 லட்​சம் முதல் 60 லட்​சம் வரையி​லான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்கி வரு​கிறது.

ஆனால், இந்த எண்​ணிக்கை 80 லட்​சம் அளவுக்கு உயர வேண்​டும். நாட்​டின் ஒட்​டுமொத்த வேலை​வாய்ப்பு சவாலுக்கு தகவல் தொழில்​நுட்​பத்​துறை மட்​டுமே தீர்​வாக இருக்க முடி​யாது. எனவே, உற்​பத்​தித் துறை​யிலும் திறன் மேம்​பாட்​டிலும் அதிக கவனம் செலுத்த வேண்​டும்.

நீடித்த பொருளா​தார வளர்ச்​சிக்கு திறன் மேம்​பாடும், உற்​பத்தி துறை வளர்ச்​சி​யும் மிக​வும் அவசி​யம். இதை, தென்​கொரி​யா, சுவிட்​சர்​லாந்​து, ஜெர்​மனி, சுவீடன் உள்​ளிட்ட நாடு​கள் நிரூபித்​துள்​ளன.

வேலை​வாய்ப்​பை பறிக்​குமா ஏஐ?

தற்​போது வளர்ந்து வரும் தொழில்​நுட்​ப​மான செயற்கை நுண்​ணறி​வால் (ஏஐ) வேலை​வாய்ப்பு பறிக்​கப்​பட்​டு​விடுமோ என்ற அச்​சம் அனை​வரின் மனதி​லும் எழுந்​துள்​ளது.

இந்​திய வேலை​வாய்ப்​புச்​சூழலை பொருத்​தவரை​யில், ஏஐ தொழில்​நுட்​பம் என்​பது வரப்​பிர​சாதம் தானே தவிர, அது ஓர் அச்​சுறுத்​தலாக இருக்​காது. ஏஐ வளர்ச்​சி​யால் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

அந்த வேலைகளுக்கு தேவை​யான தொழில்​நுட்​பத் திறன்​களை கொண்​ட​வர்​களாக நம்மை உரு​வாக்​கிக் கொள்ள வேண்​டும். அதற்​கேற்ப கல்வி நிறு​வனங்​களும் தொழில்​ நிறு​வனங்​களும் இணைந்து செயல்பட வேண்​டும்.

மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் சூழலில் வரும் காலத்​தில் எரிசக்தி பாது​காப்​பிலும், திறமை​யான பொது போக்​கு​வரத்​தி​லும் இந்​தியா கவனம் செலுத்த வேண்​டும். இதற்கு ஒருங்​கிணைந்த செயல்​பாடு​கள் அவசி​யம்.

ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு அமெரிக்​கா, சீனா, தென்​கொரியா உள்​ளிட்ட நாடு​கள் அதிக நிதி ஒதுக்​கீடு செய்​கின்​றன. நாட்​டின் ஒட்​டுமொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) அமெரிக்கா 3.46 சதவீத​மும், சீனா 2.43 சதவீத​மும், தென்​கொரியா 4.93 சதவீத​மும் நிதி ஒதுக்​கு​கின்​றன.

ஆனால், இந்​தியா தனது ஜிடிபி​யில் 0.65 சதவீதம் மட்​டுமே ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு நிதி ஒதுக்​கு​கிறது. இது அதிகரிக்​கப்பட வேண்​டும். சீனா போட்டி உலகளா​விய வர்த்​தகத்​தில் சீனா நமக்கு மிகப்​பெரிய போட்​டி​யாக இருந்து வரு​கிறது.

நாம் விவ​சாய உற்​பத்​தி, எரிசக்தி பாது​காப்​பு, செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட துறை​களில் அதிக கவனம் செலுத்த வேண்​டியது அவசி​யம். தற்​போது இந்​திய பொருளா​தா​ரம் 3.91 டிரில்​லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்​ளது.

இதை 2030-ம் ஆண்​டுக்​குள் இரண்டு மடங்​காக அதி​கரிக்க மத்​திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்​து, பல்​வேறு துறை​களில் சிறந்து விளங்​கும் ஐஐடி முன்​னாள் மாணவர்​களுக்கு சாதனை​யாளர் விருது மற்​றும் நிறுவன ஆராய்ச்சி மேம்​பாட்டு விருதை​யும் அவர் வழங்​கி​னார்.

முன்​ன​தாக, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தலை​மை​யுரை ஆற்றி பேசி​னார். விழா​வில், ஐஐடி டீன்​கள், பேராசிரியர்​கள், மாணவ-​மாணவி​கள், பெற்றோர் பங்​கேற்​றனர்.