

















Updated on:
சென்னை: நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
“நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ம் ஆண்டே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது வினாத்தாள் கசிந்தது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலைக்கு தள்ளிவைத்துள்ளது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。