




















Updated on
:
1 min read
கோடை விடுமுறை ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேரலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவலாம்.
எதிர்கால வேலைவாய்ப்பு வேகமாக மாறிவரும் சூழலில், கல்லூரி யைத் தேர்வுசெய்யும் முன் கீழ்க்கண்ட ‘3’ முக்கியக் கேள்விகளை மாணவர்கள் கேட்டுகொள்வது நல்லது. முதலில் ‘அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் அதன் பின்பு என்ன சாதிக்கிறார்கள்?’ என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
கல்லூரி படிப்புக்குப் பிறகு வேலை கிடைப்பது மட்டுமல்லாமல், அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தத்தமது துறையில் நீண்டகால வளர்ச்சி அடைகிறார்களா என்பதைப் பார்க்கலாம். கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் தகவல்களை ‘லிங்க்டுஇன்’ பக்கத்தில் தேடிப் பார்க்கலாம்.
இரண்டாவது, ‘அந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் கல்வியை எப்படிப் பார்க்கிறது?’ என்பதையும் கவனிக்க வேண்டும். பாடநூல் அறிவை மட்டும் அல்லாமல், சிந்தனைத் திறன், புதுமைகள், பல்துறை அறிவு போன்றவற்றை வளர்க்கிறதா என்பதைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது, ‘அந்தப் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள சூழல் என்ன?’ என்பதையும் மாணவர்கள் கவனிக்க வேண் டும். தொழில்துறை, ஆராய்ச்சி மையங்கள், ஸ்டார்ட்-அப் வாய்ப்புகள் போன்றவை உள்ள இடங்கள் மாணவர்களுக்கு அதிக அனுபவத்தை வழங்கும்.
எந்தெந்த நிறு வனங்களோடு அந்தக் கல்லூரி வேலைவாய்ப்புக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது, கல்லூரியின் ‘நெட்வொர்க்’ ஆகியவற்றை கருத்தில் கொள்வது நல்லது. பணி யிடப் பயிற்சிக்கான சாத்தி யங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
எதிர்கால மாற்றங்களுக்குத் தங்களை தயார்படுத்தும் கல்வி நிறுவனங்களையே தேர்வு செய்ய வேண்டும் என் பதை மாணவர்கள் என்றைக்கும் நினைவில் கொள்ள வேண்டும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。