
















கார்த்தி, 2 வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘சர்தார்’.
பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் இப்படம் செப்.10-ல் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. செப்.11-ல் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்துள்ள ‘ரணபாலி’ படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்கும் என்கிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。