惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
V
V2EX
WordPress大学
WordPress大学
Google DeepMind News
Google DeepMind News
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
H
Help Net Security
腾讯CDC
爱范儿
爱范儿
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
DataBreaches.Net
C
Check Point Blog
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இரு...
2026-04-27 · via hindutamil

பஞ்சாப் முதல்​வர் பகவந்த் மான்

Updated on

2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும் கட்சி தாவும் அபா​யம் உரு​வாகி வரு​கிறது. இது, ராகவ் சத்தா தலை​மை​யில் ஆம் ஆத்மி கட்சி எம்​.பி.க்​கள் பாஜக​வில் இணைந்ததன் தாக்​க​மாகக் கருதப்​படு​கிறது.

டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலின் ஆம் ஆத்மி கட்​சிக்கு நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யில் 10 உறுப்​பினர்​கள் இருந்​தனர். இவர்​களில் ஏழு பேர் கட்​சிக்கு எதி​ராக கிளர்ச்சி செய்ய ஒருங்​கிணைந்​தனர். ராகவ் சத்​தா, சந்​தீப் பதக், ஸ்வாதி மாலி​வால், அசோக் மிட்​டல் உள்​ளிட்ட இந்த 7 பேரும் பாஜக​வில் இணைந்​தனர். இந்​தக் கிளர்ச்​சி​யின் தாக்​கம் மக்​களவை மற்​றும் பஞ்​சாப் சட்​டபேர​வை​யிலும் ஆம் ஆத்​மிக்கு எதிராக குரல் ஒலிக்கும் சூழல் உரு​வாகி வரு​கிறது.

மக்​களவை​யில் ஆம் ஆத்​மிக்கு 3 உறுப்​பினர்​கள் உள்​ளனர். பஞ்சாபில் முதல்​வர் பகவந்த் மான் தலை​மையி​லான அரசில் 92 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இவர்​களி​லும் பலர் ஆம் ஆத்​மியை விட்டு வில​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இவர்​கள் அனைவரை​யும் கட்​சி​யில் தக்க வைப்​பது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு பெரும் சவாலாகிவிட்​டது.

இதனால் ஆம் ஆத்மி கட்​சி​யின் எதிர்​காலம் தற்​போது பெரும் கேள்விக்​குறி​யாகி வரு​கிறது. பஞ்​சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ராஜ்கு​மார் சப்​பே​வால் (ஹோஷி​யார்​பூர்), குர்​மீத் சிங் ஹேயர் (சங்​ரூர்), மல்​விந்​தர் சிங் காங் (அனந்த்​பூர் சாஹிப்) ஆகியோர் கட்சி தாவும் பட்​டியலில் முன்​னணி​யில் உள்​ளனர். வரும் சில மாதங்​களில், இவர்​கள் பாஜக​வில் இணை​ய​லாம் என கூறப்​படு​கிறது.

இது குறித்து பாஜக​வின் தேசி​யப் பொதுச்​செய​லா​ளர் தருண் சுக் கூறுகை​யில், "ஆம் ஆத்மி கட்சி தனது அடிப்​படை கொள்கைகளில் இருந்து வில​கி​விட்​டது. இதனால், அதன் தலைவர்கள் ஒவ்​வொரு​வ​ராக தற்​போது கட்​சியி​லிருந்து வெளியேற விரும்​பு​கின்​றனர்" என்​றார்.

கடந்த 2022 தேர்​தலில், பஞ்​சாப் சட்​டப்​பேர​வை​யின் 117 இடங்களில் 92 இடங்​களை கைப்​பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைத்​தது. இந்த நிலை​யில், மாநிலங்​களவை எம்​பிக்​கள் 7 பேர் ஆம் ஆத்​மியை விட்டு விலகி பாஜக​வில் இணைந்​துள்​ளனர். இவர்​களில் ராகவ் சத்​தா​வும் சந்​தீப் மிட்​டலும் பஞ்​சாபில் ஆம் ஆத்மி கட்​சி​யின் வரலாற்று வெற்​றி​யின் சிற்​பிகளாக திகழ்ந்​தனர்.

பஞ்​சாபில் அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ளது. இத்​தகைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனது இருப்பை தக்​க​வைத்​துக் கொள்​வது எளி​தாக இருக்​காது எனத் தெரி​கிறது. இது உடனடி​யாக இல்​லா​விட்​டாலும், குறைந்​தது அடுத்த சில மாதங்​களில் அர்​விந்த் கேஜ்ரி​வாலுக்கு ஒரு சவாலாகவே இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்கு விளக்​கம் அளித்த முதல்​வர் பகவந்த் மான், "பஞ்​சாபில் எங்​கள் கட்சி ஒற்​றுமை​யுடன் உள்​ளது. எனது அரசுக்கு எவ்​வித ஆபத்​தும் இல்​லை" என தெரி​வித்​துள்​ளார்.