惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
量子位
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
博客园_首页
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் ...
செய்திப்பிரிவு · 2026-05-19 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பித்து, மக்களுக்கு சுவையான, தரமான உணவு வகைகளை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சென்னை சாந்தோமில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, அதன்பின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சியிலும் இத்திட்டம் அதே பெயரில் தொடர்ந்தது.

இந்நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் தற்போது சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக, இந்த உணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.