惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
H
Help Net Security
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
GbyAI
GbyAI
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
I
InfoQ
小众软件
小众软件
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
博客园 - Franky
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: டெல்லி பயணத்தை முன்கூட்டி...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சென்னை: டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக் கொண்டு முதல்​வர் விஜய் நேற்று சென்னை திரும்​பினார். முன்​ன​தாக திட்​டமிடப்பட்ட சோனி​யா, ராகுல் சந்​திப்பு ரத்து செய்யப்​பட்​டதால் அரசி​யலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்சி அமைக்க பெரும்​பான்மை கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன் விஜய் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இப்​படி​யான அரசி​யல் திருப்​பங்​களுக்​கிடையே முதல்​வர் விஜய் நேற்று முன்​தினம் டெல்லி சென்​றார். இது அவரது முதல் டெல்லி பயணம் என்​ப​தால், தேசிய அளவில் இது உன்​னிப்​பாகக் கவனிக்​கப்​பட்​டது.

சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் 27-ம் தேதி மதி​யம் டெல்லி சென்​றடைந்த விஜய்க்​கு, தமிழக அரசு விருந்​தினர் இல்​லத்​தில் தமிழக காவல்​துறை சார்​பில் முறைப்​படி​யான அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. அன்​றைய தினம் மாலை 4.30 மணி​யள​வில் நாடாளு​மன்ற வளாகத்​தில் பிரதமர் நரேந்​திர மோடியை விஜய் சந்​தித்​துப் பேசி​னார்.

பிரதமரைத் தொடர்ந்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை விஜய் சந்​திப்​ப​தாக இருந்​தது. ஆனால், கடைசி நேரத்​தில் அந்த சந்​திப்பு நடை​பெற​வில்​லை. அதையடுத்து விஜய் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை சந்​தித்து தமிழகத்​துக்​கான திட்​டங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்​நிலை​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களான சோனியா, ராகுல், மல்​லி​கார்​ஜூன கார்கே ஆகியோரை​யும் விஜய் சந்​திப்​பார் என்ற தகவல் வெளி​யானது.

இதனால் சோனியாவின் இல்​லத்​தைச் சுற்​றி​லும் முதல்​வர் விஜய்யை வரவேற்று பிரம்​மாண்ட பதாகைகளும் வைக்​கப்​பட்​டிருந்​தன. ஆனால் திடீரென காங்​கிரஸ் தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு ரத்​தானது. முன்​ன​தாக கேரளா​வின் புதிய காங்​கிரஸ் முதல்​வ​ராக சதீஷன் பதவி​யேற்​கும் விழா​வில் விஜய் பங்​கேற்​ப​தாக இருந்த திட்​டம் திடீரென ரத்​தான நிலை​யில், டெல்​லி​யில் காங்​கிரஸ் தலை​வர்​களை விஜய் சந்​திக்க இருந்த திட்​ட​மும் ரத்​தானது இது கட்சி நிர்​வாகி​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இப்​படி​யான சூழலில் நேற்று காலை 10 மணி​யள​வில் டெல்லி பயணத்தை முன்​கூட்​டியே முடித்​துக்​கொண்டு தனி விமானத்​தில் விஜய் சென்னை திரும்​பி​னார்.

முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கமாக கருணாநி​தி, ஜெயலலி​தா, ஸ்டா​லின், பழனி​சாமி உள்​ளிட்ட முன்​னாள் முதல்​வர்​கள் டெல்லி சென்று பிரதமரை சந்​தித்​தால் தமிழ்​நாடு அரசு விருந்​தினர் இல்​லத்​தில் செய்​தி​யாளர்​களைச் சந்​திப்​பது வழக்​கம். ஆனால் விஜய் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பை​யும் தவிர்த்​தது பேசுபொருளானது.

இதுகுறித்து சென்னை தலை​மைச் செயலக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிரதமர் மோடி​யுட​னான விஜய்​யின் சந்​திப்பு சுமார் 10 நிமிடங்​கள் நீடித்​தது. இந்த சந்​திப்​பின்போது நெதர்​லாந்​தில் இருந்து வரலாற்​றுச் சிறப்​புமிக்க சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்​கலம் செப்​புப் பட்​ட​யங்​களை மீட்​டுக் கொண்டு வர வழி​வகை செய்​ததற்​காகப் பிரதமருக்கு விஜய் நன்றி தெரி​வித்​தார்.

மேலும் காவிரி ஆற்​றின் குறுக்கே கர்​நாடக அரசு திட்​ட​மிட்​டுள்ள மேகே​தாட்டு அணைத் திட்​டத்​தால் தமிழக விவ​சா​யிகளுக்கு ஏற்​படும் பாதிப்​பு​கள் குறித்​தும் விவரித்​தார். இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் தொடர்ச்​சி​யாக கைது செய்​யப்​படு​வதற்கு நிரந்​தரத் தீர்வு காண வலி​யுறுத்​தி​னார். அரசு விழாக்​களில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வது தொடர்​பாக அண்​மை​யில் எழுந்த சர்ச்சை குறித்து பேசி​னார்.

தமிழகத்​தில் விமானப் போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு மையம் மற்​றும் பாது​காப்​புத் துறை சார்ந்த வான்​வழி உள்​கட்​டமைப்​பு​களை நிறு​வக் கோரி​யும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்​தார். அமித் ஷாவுக்கு அவசர அலு​வல் பணி​கள் இருந்​த​தால் விஜய்யை சந்​திக்​க​வில்​லை. ஆனால் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களை சந்​திக்​காமல் சென்​னைக்கு திரும்​பிய​தில் பல்​வேறு அரசி​யல் காரணங்​கள் முன்​வைக்​கப்​படு​கின்​றன.

காவிரி விவ​காரம் மற்​றும் தமிழகத்​தில் நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது எழுந்த குதிரை பேர சர்ச்​சைகள், கர்​நாடக காங்​கிரஸில் வெடித்​துள்ள உள்​கட்சி பிரச்சினை போன்​றவற்​றால் இப்​போது காங்​கிரஸ் தலை​வர்​களைச் சந்​தித்​தால் அது தேவையற்ற விவாதங்​களை உரு​வாக்​கும் என்​ப​தால் விஜய் இந்​தச் சந்​திப்​பைத் தவிர்த்​த​தாக ஒருதரப்​பில் தகவல்​கள் கூறப்​படு​கின்​றன. ஆனால் மற்​றொரு தரப்போ காங்​கிரஸ் தலை​வர்​களு​ட​னான சந்​திப்பு நடை​பெறாததற்கு பின்​னணி​யில் சில அரசி​யல் அழுத்​தங்​களும் இருக்​கலாம் என்​கிறார்​கள். இவ்​வாறு தெரி​வித்​தனர்.

காரணம் என்ன? - இந்​தச் சர்ச்சை குறித்து காங்​கிரஸ் எம்​.பி. கிறிஸ்​டோபர் திலக் கூறிய​தாவது: இதனை தமிழக முதல்​வர் ஒரு அரசு​முறைப் பயண​மாக மட்​டுமே வைத்​திருக்க விரும்​பி​யிருக்​கலாம். அதனால்​தான் பிரதமரை மட்​டும் சந்​தித்​து​விட்​டுத் திரும்​பி​யுள்​ளார். ஜூன் 11-ம் தேதி முதல்​வர் மீண்​டும் டெல்லி வரவுள்​ளார். அப்​போது நிச்​சய​மாக சோனியா, ராகுலைச் சந்​திப்​பார்.

தற்​போது ஜார்​கண்ட் மாநிலங்களவை சீட், கர்​நாடகாவில் முதல்​வர் தேர்வு உள்​ளிட்ட விஷ​யங்​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக அந்த மாநில காங்​கிரஸ் தலை​வர்​கள் டெல்லி வந்​துள்​ளனர். கடந்த இரண்டு நாட்​களாக இந்த விவாதங்​கள் சோனியா இல்​லத்​தில் தீவிர​மாக நடந்து வரு​வ​தால், தமிழக முதல்​வருடன் விரி​வாக அமர்ந்து பேசுவதற்​கான நேர​மும் வாய்ப்​பும் காங்​கிரஸ் தலை​வர்​களுக்​குக் குறை​வாக இருந்​தது. இதில் யோசிப்​ப​தற்கோ அல்​லது எதிர்​மறை​யாக நினைப்​ப​தற்கோ எது​வும் இல்​லை. நாங்​கள் தவெக கூட்​ட​ணி​யில் நீடிக்​கிறோம், அமைச்​சர​வை​யிலும் இருக்​கிறோம்.

எனவே, நாங்​கள் சந்​திப்​ப​தில் எந்​தச் சிக்​கலும் இல்​லை. விஜய் முதல்வ​ராக பதவி​யேற்​ற​போது ராகுல்தான் முதல் ஆளாக வந்து பங்கேற்றார். சோனியா காந்தி இல்​லத்​தில் முதல்​வருக்கு விருந்து கொடுக்​கத் திட்​ட​மிடப்​பட்​டிருக்​கலாம்​. ஆனால்​, காங்​கிரஸ்​ தலை​மை சில முக்​கிய உள்​கட்​சி முடிவு​களை எடுக்​க வேண்​டி​யிருந்​த​தால்​, அது அடுத்​த முறைக்​குதள்​ளிவைக்​கப்​பட்​டிருக்​கலாம்​. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.