惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
V
Visual Studio Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
量子位
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
美团技术团队
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
罗磊的独立博客
有赞技术团队
有赞技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“உங்கள் மகளின் நினைவு வரவில்லையா?” - வேடநத்தம் மாணவி கொலை...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

தூத்துக்குடி: வேடநத்​தம் பள்ளி மாணவி கொலை வழக்​கில் போக்சோ நீதி​மன்ற நீதிபதி பிரீத்தா நேற்று குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்புக்கு முன்னதாக தர்ம முனீஸ்​வரனிடம் நீதிப​தி, “உங்​களை சார்ந்து உங்​கள் குடும்​பத்​தில் யாரும் உள்ளன​ரா” என்று கேட்​டார். பின்​னர், “உங்​கள் தாய் மட்​டும்​தான் உங்​களு​டன் இருக்​கிறார். உங்​கள் மனை​வி​யும், மகளும் உங்​களை பிரிந்து சென்று விட்​டனர்.

ஏற்கெனவே ஒரு பெண்ணை பாலியல் பலாத்​காரம் செய்து கொலை செய்​து, அந்த வழக்​கில் இரட்டை ஆயுள் தண்​டனை பெற்று ஜாமீனில் வெளியே வந்த நிலை​யில், நீங்​கள் செய்​துள்ள இந்த சம்​பம் கொடூர​மானது.

மாண​வி​யின் பிரேத பரிசோதனை அறிக்​கையை முழு​மை​யாக படித்த போது​தான் நீங்​கள் எவ்​வளவு கொடூர​மாக நடந்து கொண்​டீர்​கள் என்​பது தெரிய​வந்​தது.

உங்​கள் மகள் போன்ற ஒரு குழந்​தையை இது போன்று கொடூர​மான செயலில் ஈடு​பட்​ட​ போது உங்​கள் மகளின் நினைவு வரவில்​லை​யா, அந்த குழந்​தையை பாது​காக்க வேண்​டும் எனத் தோன்ற​வில்​லை​யா? இந்​த​கொடுர செயலுக்கு உங்​களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்​தால் அது சரி​யா​காது.

அரசு தரப்​பில் குற்​றத்​துக்கு ஏற்ப பெரிய தண்​டனை​யாக வழங்க வேண்​டும் என வாதிடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு இந்​தியா முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இருப்​பினும் உங்​களுக்கு வழங்​கப்​படும் மரண தண்​டனையை குறைப்​ப​தற்​காக, உங்​கள் தரப்​பில் ஏதாவது ஒரு காரணம் இருக்​குமா என ஆய்வு செய்ததில், எங்​களுக்கு எந்தக் காரண​மும் கிடைக்​க​வில்​லை.

உங்​களுக்கு விதிக்​கப்​படும் இந்த தண்​டனை, பெண் குழந்​தைகள், பெண்​களுக்கு எதி​ராக நடக்​கும் பாலியல் வன்​முறை​களுக்கு ஒரு பாட​மாக இருக்​கும்” என்று குறிப்​பிட்​டார். அதன்​பிறகு இரட்டை தூக்கு தண்​டனை அறி​வித்​தார்.

வழக்கு கடந்​து​வந்த பாதை

மாணவி கொலை செய்​யப்​பட்​டதை கண்​டித்து கடந்த மார்ச் 12-ம் தேதி கிராம மக்​கள் 12 மணி நேர மறியலில் ஈடு​பட்​டனர். புகாரை பெறாமல் அலட்சியமாக செயல்பட்ட விளாத்திகுளம் மகளிர் காவல் நிலை​ய ஆய்வாளர் பிர​வீனா மார்ச் 12-ல் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

உயி​ரிழந்த மாண​வி​யின் குடும்​பத்​தினரை பல்​வேறு அரசி​யல் கட்​சி​யின் தலை​வர்​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். போலீ​ஸாருக்கு சம்​பவம் நடை​பெற்று 9 நாட்​களாக எந்தவித துப்​பும் கிடைக்​காமல் திணறினர்.

இந்​நிலை​யில், வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த புரோட்டா மாஸ்​டர் கொடுத்த ரகசிய தகவலை தொடர்ந்​து, அப்​பகு​தி​யில் இருந்த காற்​றாலை கோபுர சிசிடிவி கேம​ரா​வில் பதி​வாகி இருந்த காட்​சிகள் மூலம், சாயல்​குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்​வரனை போலீ​ஸார் மார்ச் 19-ம் தேதி கைது செய்​தனர்.

இதுதொடர்​பாக குளத்​தூர் காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, மார்ச் 20-ம் தேதி பலத்த பாது​காப்​புடன் வேடநத்​தம் காட்​டுப்​பகு​திக்கு தர்ம முனீஸ்​வரனை அழைத்து வந்து சம்​பவம் குறித்து நடித்து காண்​பிக்​கச் செய்து போலீ​ஸார் அதை வீடியோ பதிவு செய்​தனர்.

குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டதை தொடர்ந்து மார்ச் 20-ம் தேதி பெற்​றோர் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனையி​லிருந்து மாண​வி​யின் சடலத்தை பெற்று 10 நாட்​களுக்​குப் பிறகு தகனம் செய்​தனர்​.