惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog
C
Check Point Blog
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
Vercel News
Vercel News
腾讯CDC
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
H
Help Net Security
博客园 - 三生石上(FineUI控件)
D
DataBreaches.Net
Microsoft Security Blog
Microsoft Security Blog
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பேரவைக்கு மதுபோதையில் வந்த முதல்வர் பகவந்த் மான்: பாஜக எம...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு மது போதை​யில் முதல்​வர் பகவந்த் மான் வந்​தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்​களவை எம்​.பி. ஸ்வாதி மாலி​வால் குற்​றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்களவை எம்​.பி.க்​கள் அண்​மை​யில் அந்​தக் கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் சேர்ந்​தனர். இதனால் பஞ்​சாப் ஆம் ஆத்மி கட்​சி​யில் பெரும் சலசலப்பு ஏற்​பட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநில சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் பகவந்த் மான் கலந்து கொண்டு உரை​யாற்​றி​னார். இந்நிலை​யில் பேர​வைக் கூட்​டத்​துக்கு முதல்​வர் பகவந்த் மான் மது அருந்​தி​விட்டு வந்​த​தாக காங்​கிரஸ், அகாலி தளம் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளன.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சுக்​பால் சிங் கைரா தனது எக்ஸ் தளத்​தில், ‘‘சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் பகவந்த் மான் போதை​யில் இருந்​தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்​தப்பட வேண்​டும். நாங்​கள் (காங்​கிரஸ்) அவையில் இருந்து வெளிநடப்பு செய்​து​விட்​டோம். மேலும், நாங்களே முன்​வந்து அந்​தப் பரிசோதனையை மேற்​கொள்​ள​வும் தயா​ராக இருக்​கிறோம்’’ என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

மேலும் சிரோமணி அகாலி தளம் கட்சி தனது எக்ஸ் தளத்​தில், ‘‘முதல்​வரின் நடத்​தையைச் சிரோமணி அகாலி தளம் வன்மையாகக் கண்​டிக்​கிறது; இந்​நாளில் அவர் மது அருந்​திய நிலை​யில் வந்​திருக்​கக் கூடாது. அவரை இன்றே ஒட்​டுமொத்த பஞ்சாப் மாநில மக்​களின் முன்​னிலை​யில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்​படுத்​தப்பட வேண்​டும்’’ என குறிப்பிட்டுள்ளது.

பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் ஸ்வாதி மாலி​வால் தனது எக்ஸ் தளத்​தில், ‘‘ஜன​நாயகத்​தின் ஆலய​மாகத் திகழும் பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்​கு, பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் இன்று மீண்டும் மது போதை​யில் வந்​துள்​ளார். இது மிகப்​பெரிய அவமானம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும். அவர் மது அருந்​தி​யிருந்​தாரா என்​பது தொடர்​பாக உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்​தப்​பட வேண்​டும்’’ என்​று தெரிவித்துள்​ளார்​.