惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
B
Blog
博客园_首页
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
B
Blog RSS Feed
M
MIT News - Artificial intelligence
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
量子位
V
V2EX
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

லக்னோ: உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர், அவரது குடும்​பத்​தார் கைது செய்​யப்​பட்​டனர்.

அப்​போது அந்​தப் பெண்​ணின் தங்க நகைகளை பறி​முதல் செய்த போலீ​ஸார் அவற்றை போலீஸ் நிலைய காப்பக அறை​யில் வைத்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்​ர​வரி மாதம் பெண்​ணின் கணவர் விடுவிக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்​தி​லுள்ள தங்க நகைகளை தங்​களிடம் தரு​மாறு கணவர், நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​தார்.

அப்​போது போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில் கூறிய​தாவது: கடந்த 2013-ல் கடும் மழை பெய்​த​ போது காப்பக அறை​யில் துணி​யால் சுற்றி வைக்​கப்​பட்​டிருந்த தங்க நகைகள் நனைந்​து​விட்​டன. அவற்றை உலர வைப்பதற்காக காப்பக அறை​யின் மேல் திறந்​தவெளி​யில் வைத்​திருந்​தோம்.

அப்​போது அறை​யின் மேல்​பகு​திக்கு எங்​கிருந்தோ வந்த குரங்​குக் கூட்​டம் தங்க நகைளை வீசி எறிந்​தும், உடைத்​தும் பாழ்படுத்திவிட்​டன. மேலும் தங்க நகைகளை குரங்​கு​களே எடுத்துச் சென்​று​விட்​டன. அந்த தங்க நகைகளை எங்​களால் மீட்க முடிய​வில்​லை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால், போலீஸார் அளித்த தகவலை லக்​கிம்​பூர் மாவட்ட நீதி​மன்​றம் ஏற்க​வில்​லை. இதுதொடர்​பாக தீவிர​மாக விசா​ரித்து அறிக்கை அளிக்​கு​மாறு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்த 17-ம் தேதி லக்​கிம்​பூர் மாவட்ட போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில், போலீஸ் அறை​யின் காப்​பகத்​தில் அதி​காரி​களாகச் செயல்​பட்ட சந்​திரிகா பிர​சாத், ராம்​பக்ஸ் பால் ஆகியோர் 2007 மற்​றம் 2009-ம் ஆண்டுக்கு இடைப்​பட்ட காலத்​தில் இறந்​து​விட்​டனர். எனவே, இந்த வழக்​கில் மேலும் விசா​ரணையை நீட்​டிக்க முடிய​வில்லை. வழக்கை முடித்​து​விடலாம் என்​று தெரி​வித்​துள்​ளனர்.

அதே​நேரத்​தில் போலீஸ் நிலை​யத்​தில் காப்​பாளர்​களாக இருந்த போலீ​ஸாரின் பெயர்ப் பட்​டியலில் உள்ள பெயர்​களும், போலீஸார் பிர​மாணப் பத்​திரத்​தில் உள்ள பெயர்​களும் ஒத்​துப்​போக​வில்லை. காப்பக அறை​யின் பொறுப்​பாளர்​களாக மோல்​ஹே​ராம், ரமா​காந்த் திவாரி, மேவ​ராம், ஈஸ்​வர் தயாள் ஆகியோர் செயல்​பட்டு வந்​துள்​ளனர். இதில் ஈஸ்​வர் தயாள் மட்​டுமே இறந்துவிட்​டார்.

ஆனால், பிர​மாணப் பத்​திரத்​தில் சந்​திர​காந்த் பிர​சாத், ராம்பக்ஸ்பால் ஆகியோரது பெயர்​கள் கொடுக்​கப்​பட்​டுள்​ளது சந்​தேகத்தை எழுப்​பு​கிறது என்று பெண்​ணின் கணவரது சார்​பில் வாதாடும் வழக்​கறிஞர் சைலேந்​திர கவுட் தெரி​வித்​துள்​ளார்​. இந்​த வழக்​கு உத்​தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.