惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
B
Blog
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
A
About on SuperTechFans
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கே...
2026-04-25 · via hindutamil

போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா.

Updated on

1 min read

சென்னை: கைதி​களை நீதி​மன்​றம் மற்​றும் சிறைக்கு அழைத்​துச் செல்​லும் போலீஸ் வாக​னங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

சென்​னை​யில் கொலை, கொள்​ளை, வழிப்​பறி உள்​ளிட்ட குற்​றச்​செயல்​களில் ஈடு​படும் நபர்​கள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி புழல், சைதாப்​பேட்டை உள்​ளிட்ட பல்​வேறு சிறை​களில் அடைக்​கப்​படு​கின்​றனர்.

மேலும், அவர்​கள் தொடர்​பான வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நடை​பெறும்​போது, காவல் வாக​னங்​களில் அழைத்​துச் செல்​லப்​பட்டு ஆஜர்​படுத்​தப்​படு​கின்​றனர்.

பின்​னர், அதே வாக​னத்​தில் அழைத்து வந்து மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​படு​கின்​றனர். பல நேரங்​களில் வெளி மாவட்ட நீதி​மன்​றங்​களுக்​கும் அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர்.

சில நேரங்​களில், பயங்கர ரவுடிகள் மற்​றும் கொடூர குற்​ற​வாளி​களை வாக​னங்​களில் நீதி​மன்​றத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​படும்​போதோ அல்​லது திரும்பி வரும்​போதோ பாது​காப்​புக்​காக உடன்​வரும் போலீ​ஸாருடன் வீண் தகராறில் ஈடு​படு​கின்​றனர்.

சிலசம​யம் போலீ​ஸார் தாக்​கப்​படு​கின்​றனர். ஆனால், இதன் உண்​மைத் தன்மை வெளிவரு​வது இல்​லை. யார் மீது தவறு? தாக்​குதல் நடந்​ததற்கு என்ன காரணம் என்​பதை கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​படு​கிறது.

மேலும், நீதி​மன்​றத்​தில் விசா​ரணை முடிந்து வாக​னத்​தில் சிறைக்கு அழைத்​துச் செல்​லும்​போது கைதி​களின் உறவினர்​கள் கஞ்சா பொட்​டலங்​களை காவல் வாக​னங்​களில் வீசும் சம்​பவங்​களும் நடை​பெறுகின்​றன.

இத்​தகைய பிரச்​சினை​களைத் தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டனர். ஆனால், எதிர்​பார்த்த பலன் கிடைக்​க​வில்​லை. இதையடுத்​து, சிறைத்​துறை அதி​காரி​கள் மற்​றும் சென்னை போலீஸ் அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து ஆலோ​சனை நடத்​தி​ய​தில், கைதி​களை அழைத்​துச் செல்​லும் காவல் வாக​னங்​களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, முதல் கட்​ட​மாக சென்​னை​யில் சிறைக் கைதி​களை அழைத்​துச் செல்​லும் 50-க்​கும் மேற்​பட்ட காவல் வாக​னங்​களில் நவீன சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.