惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி.யில் திருமண ஊர்வல இசைக் கச்சேரியில் அதிக ஓசையால் 140...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: உ.பி.​யில் ஒரு கோழிப்​பண்​ணை​யில் 140 கோழிகள் இறந்​தது தொடர்​பாக இசைக் கச்​சேரி நிர்​வாகி மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கச்​சேரி​யின் அளவுக்கு அதி​க​மான ஓசை​யால் கோழிகள் மாரடைப்​பால் இறந்​த​தாக காரணம் கூறப்படு​கிறது.

உ.பி.​யில் திருமண நிகழ்ச்​சி​யின் மாப்​பிள்ளை ஊர்​வலத்​தில் டிஜே எனும் இசைக் கச்​சேரி இடம்​பெறு​வது வழக்​கம். இந்​நிலை​யில் உ.பி.​யின் சுல்​தான்​பூர் மாவட்​டம், தரி​யாபூர் கிராமத்​தில் கடந்த ஏப்​ரல் 25-ம் தேதி ஒரு திருமண ஊர்​வலம் டிஜே கச்சேரியுடன் நடை​பெற்​றது. அதில் கிளம்​பிய அளவுக்கு மீறிய ஓசை அதன் வழி​யில் உள்ள ஒரு கோழிப்​பண்​ணை​யில் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

கச்​சேரி​யின் ஓசை தாங்​காமல் இங்கு 140 கோழிகள் இறந்​தன. இது தொடர்​பாக தரி​யாபூர் காவல் நிலை​யத்​தில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர் சாபீர் அலி, புகார் அளித்​தார். இதையடுத்து உயி​ரிழந்த கோழிகளுக்​கான உடற்​கூறு ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் டிஜே இரைச்​சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் இதனால் ஏற்​பட்ட மாரடைப்​பால் 140 கோழிகள் இறந்​த​தாக​வும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து உடற்​கூறு ஆய்வு நடத்​திய தலைமை கால்​நடை மருத்துவ அதி​காரி பிரமோத் சர்மா கூறுகை​யில், “திருமண ஊர்​வலத்​தின் டிஜே வாக​னம் கோழிப்​பண்​ணையை கடந்து சென்​ற​போது, அதிலிருந்து வெளி​யான உரத்த இரைச்​சலும் அதிர்​வு​களும் அங்​கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்​தது. இந்​தத் திடீர் பீதி காரண​மாக கோழிகள் மிரண்​டு​போய், கண் இமைக்​கும் நேரத்​தில் 140 கோழிகள் உயி​ரிழந்​துள்​ளன.

மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்த கோழிகளுக்​கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்​பட்ட மன அழுத்​தச் சூழலும் தாங்க முடி​யாமல் போய் உள்​ளது. இதுவே கோழிகளின் உயி​ரிழப்​புக்கு ஒரு முக்​கியக் காரண​மாக அமைந்​திருக்​கலாம்” என்​றார்.

வழக்குப் பதிவு

இந்த உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில் டிஜே இசைக் கச்​சேரி நிர்​வாகி கவி யாதவ் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். வினோத​மான இந்தப் புது​வித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.