惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
小众软件
小众软件
I
InfoQ
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரூ.200 கோடி பணமோசடி வழக்கு - ‘அப்​ரூவர்’ மனுவை வாபஸ் பெற்...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

பண மோசடி வழக்​கில், அரசு தரப்பு சாட்​சி​யாக மாறக் கோரி தாக்​கல் செய்த மனுவை, பாலிவுட் நடிகை ஜாக்​குலின் பெர்னாண்டஸ் திரும்​பப் பெற்​றார்.

பெங்​களூரு​வைச் சேர்ந்த சுகேஷ் சந்​திரசேகர் என்​பவர், அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் ஆட்​சி​யாளர்​களு​டன் நட்பு இருப்​ப​தாகக் கூறி தொழில​திபர்​கள், அரசி​யல் பிரபலங்​கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்​த​தாக புகார்​கள் எழுந்​தன. இரட்டை இலை சின்​னத்தை மீட்டு தரு​வ​தாகக் கூறி, டிடிவி தினகரன் தரப்புக்​காகத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு லஞ்​சம் கொடுக்க முயன்ற வழக்​கில், சுகேஷ் கைது செய்​யப்​பட்​டார்.

சிறை​யில் இருந்​த​வாறே தொழில​திபர் ஷிவிந்​தர் சிங்​கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்​தது தொடர்​பாக சுகேஷ் சந்​திரசேகர் மீது டெல்லி பொருளா​தா​ரக் குற்றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இதில் கிடைத்த பணத்​தைக் கொண்டு அவர், நடிகை ஜாக்​குலின் பெர்​னாண்​டஸுக்கு ஏராள​மான, விலை​ உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை குற்​றம் சுமத்தி​யது. இதன் காரண​மாக, இந்த பணமோசடி வழக்​கில் ஜாக்குலின் குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் இவ்​வழக்​கில் அரசு தரப்பு சாட்​சி​யாக மாற, ஜாக்குலின் பெர்​னாண்​டஸ் டெல்லி பாட்​டி​யாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​தார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறு​வதற்கு அமலாக்​கத்​துறை கடும் எதிர்ப்பு தெரிவித்​தது.

அவர் இந்த வழக்​கில் ஒரு பாதிக்​கப்பட்ட நபர் அல்ல, மாறாக குற்றத்​தின் மூலம் கிடைத்த பணத்​தில் பலன்​களை அனுபவித்தவர் என்று அமலாக்​கத்​துறை வாதிட்​டது. அமலாக்கத்துறை​யின் கடும் எதிர்ப்​பைத் தொடர்ந்​து, ஜாக்​குலின் தரப்பு வழக்​கறிஞர் அந்த மனு​வைத் திரும்​பப் பெறு​வதாகத் தெரிவித்​தார். இதை ஏற்​றுக்​கொண்ட நீதிபதி பிர​சாந்த் சர்​மா, மனு​வைத் தள்​ளு​படி செய்​தார்.