惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
J
Java Code Geeks
博客园 - 聂微东
博客园 - 司徒正美
大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
美团技术团队
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில...
2026-05-18 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி பவன் குமார் சந்தானா அமைத்​துள்ள ரூ.10,000 கோடி மதிப்​பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தின் விக்​ரம்-1 ராக்​கெட் முதல் முறை​யாக ஸ்ரீஹரி​கோட்​டா​விலிருந்து விரை​வில் விண்​ணில் பாய்​கிறது.

இஸ்ரோ நிறு​வனத்​தில் 8 ஆண்​டு​களுக்கு முன் பணி​யாற்​றிய விஞ்ஞானி பவன் குமார் சந்​தா​னா. அப்​போது அவரது மாத சம்​பளம் ரூ.75,000. இவரும் நாகா பாரத் டாக்கா என்​பவரும் இணைந்து ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கினர். இது​தான் நாட்டின் முதல் விண்​வெளி தொழில்​நுட்ப தனி​யார் நிறு​வனம்.

இந்​நிறு​வனத்​தின் தற்​போதைய மதிப்பு ரூ.10,000 கோடி. இந்​நிறுவனம் தயாரித்த விக்​ரம் 1 என்ற ராக்​கெட் முதல் முறை​யாக ஸ்ரீஹரி​கோட்டா ஏவுதளத்​தில் இருந்து சில வாரங்​களில் விண்​ணில் பாய​வுள்​ளது.

இது குறித்து ஸ்கைரூட் நிறு​வனத்​தின் நிறு​வனர் பவன் குமார் சந்தானா கூறிய​தாவது: மனிதர்​களால் இது​வரை உரு​வாக்​கப்​பட்​ட​திலேயே மிக​வும் சவாலான இயந்​திரம் ராக்​கெட்தான். உலகெங்கிலும் நடந்த ராக்​கெட் ஏவுதல்​களால் நான் பெரிதும் ஈர்க்​கப்​பட்​டேன். இந்த ஆர்​வம் என்னை இஸ்​ரோவுக்கு அழைத்​துச் சென்​றது. இந்​தி​யா​வின் பாகுபலி ராக்​கெட் எல்​விஎம்-3 திட்​டத்​தில் பணி​யாற்​றினேன். அந்த அனுபவம், பிற்​காலத்​தில் ஸ்கைரூட் நிறு​வன​மாக உரு​வெடுப்​ப​தற்​கான தொழில்​நுட்ப மற்​றும் உணர்​வுபூர்​வ​மான அடித்​தளத்தை அமைத்​துக் கொடுத்​தது.

கடந்த 2022-ல் இந்தியாவின் முதல் தனி​யார் ராக்​கெட்​டான ‘விக்​ரம் எஸ்' ஏவியதன் மூலம் ஸ்கைரூட் ஏற்​கெனவே வரலாற்​றில் தனது பெயரைப் பதிவு செய்​தது. தற்​போது, சுமார் 160 மில்​லியன் டாலர் நிதி முதலீடு மற்​றும் ஒரு பில்​லியன் டாலருக்​கும் அதி​க​மான சந்தை மதிப்​புடன், இந்​தி​யா​வின் முதல் தனி​யார் விண்​வெளித் தொழில்​நுட்ப நிறு​வன​மாக இது உரு​வெடுத்​துள்​ளது

விண்​வெளியை அனை​வருக்​கும் சாத்​தி​ய​மாக்​கு​வதே எங்​களது நோக்​கம். ஒரு வாடகை காரையோ, அல்​லது ஒரு வாடகை விமானத்​தையோ முன்​ப​திவு செய்​வது போல, ராக்​கெட்டை வாடகைக்கு எடுத்து விண்​வெளிக்​குச் செல்​வதும் எதிர்​காலத்​தில் எளி​தாகும். விரை​வில் ‘விக்​ரம் 1' ராக்​கெட் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து ஏவப்​பட​வுள்​ளது. இது சுமார் 300 கிலோ எடையைச் சுமந்து செல்​லும் திறன் கொண்​டது. நாங்​கள் இனி தயாரிக்​கும் ராக்கெட்டு​கள், விண்​வெளி சுற்​றுப்​பாதைக்​குக் கிட்​டத்​தட்ட ஒருடன் எடையைக் கொண்டு செல்​லும் திறனுடன் இருக்​கும்.

இப்​போது தரவு மையங்​கள் விண்​வெளி​யில் அமைக்​கப்பட உள்ளன. தகவல் தொடர்​பு, நேரடியாக மொபைலுக்​கான தொடர்பு போன்ற அனைத்​துப் பயன்​பாடுகளும் இந்​தத் தேவையை அதிகரிக்​கின்​றன. பெரிய செயற்​கைக்​கோள்​களுக்​குப் பதிலாகச் சிறிய செயற்​கைக்​கோள்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இது ஆயிரக்​கணக்​கான செயற்​கைக்​கோள்​கள் ஒன்​றாக இணைந்து செயல்​படும் விண்​வெளி தொகுப்​பு​களை சாத்தியமாக்கு​கிறது. இதனால் விண்​வெளித் துறை​யின் பொருளா​தா​ரத்​தையே மாற்றி அமைத்​து, ஸ்கைரூட்​ போன்​ற சுறுசுறுப்​பான நிறு​வனங்​களுக்​குப்​ பல வாய்ப்​பு​களை உரு​வாக்குகிறது. இவ்​வாறு பவன்​ குமார்​ தெரிவித்​தார்​.