惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
腾讯CDC
爱范儿
爱范儿
Google DeepMind News
Google DeepMind News
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI
量子位
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
T
The Blog of Author Tim Ferriss
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
S
SegmentFault 最新的问题
D
Docker
博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
Jina AI
Jina AI
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்காசிய போர் நிறுத்தம் நீட்டிப்பு: இந்தியா வரவேற்பு
2026-04-23 · via hindutamil

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Updated on

1 min read

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:

“இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக நிற்கும். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சார்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கையையும் இந்தியா வரவேற்கும். மேற்காசிய போர் நிறுத்தத்தை இந்தியா ஏற்கெனவே வரவேற்றுள்ளது. அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் இந்த மோதலை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புகிறோம்.

மேற்காசிய மோதல் காரணமாக உலக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையில்லாத வகையில் கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தார். “ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும் வரையில் இந்த போர் நிறுத்தம் தொடரும். அதே நேரத்தில் ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நான் கூறியுள்ளேன்,” என தனது அறிவிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் (ஏப்.22) நிறைவடைகிறது. இந்த சூழலில் ட்ரம்ப் இதனை நீட்டித்துள்ளார்.

இந்த சூழலில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல் ஆகும். அதை அமெரிக்கா விலக்கிக் கொண்டால் தங்கள் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.