惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
I
InfoQ
L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Y
Y Combinator Blog
博客园_首页
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
C
Check Point Blog
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
F
Fortinet All Blogs
月光博客
月光博客
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் தமிழகத்தில் 15 போலீஸ் ...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் 15 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உள்​துறை செயலர் கே.மணி​வாசன் பிறப்​பித்த உத்​தர​வு: சென்னை காவலர் நலன் பிரிவு துணை ஆணை​யர் டி.கண்​ணன் தாம்​பரம் காவல் ஆணை​யரக தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாகப்​பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், தாம்​பரம் மத்​திய குற்​றப்​பிரிவு துணை ஆணை​யர் ஏ.வேல்​முரு​கன் காவல்​துறை நவீனமய​மாக்​கல் பிரிவு உதவி ஐஜி-​யாக​வும், காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த ஜி.ஸ்​டா​லின் தாம்​பரம் மத்​திய குற்​றப்​பிரிவுக்​கும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

இதே​போல், காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த டி.ரமேஷ் பாபு தீவிர​வாத தடுப்பு பிரிவு எஸ்​பி-​யாக​வும், அதே​போல் காத்​திருப்​போர் பட்​டியலில் இருந்த வி.​வி.கீ​தாஞ்​சலி பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த பி.சுந்​தர​வடிவேல் சென்னை பாது​காப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், மதுரை தீவிர​வாத தடுப்பு பிரிவு எஸ்பி ஆர்​.ரமேஷ் கிருஷ்ணன் திருப்​பூர் வடக்கு துணை ஆணை​ய​ராக​வும், தமிழ்​நாடு கமாண்டோ படை எஸ்பி கே.மகேஷ்வரி செங்​குன்​றம் துணை ஆணை​ய​ராக​வும் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் கோயம்​பேடு துணை ஆணை​யர் உதயகு​மார் திருவண்ணா​மலை எஸ்​பி-​யாக​வும், அங்​கிருந்த ஏ.சி.கார்த்திகேயன் அடை​யாறு காவல் துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த நியமனங்களைத் தவிர ராம​நாத​புரம் கீழக்​கரை சப்​-டிவிஷன் உதவி எஸ்பி குணால் உத்​தம் ஷ்ரோதே பதவி உயர்வு பெற்று கோயம்​பேடு துணை ஆணை​ய​ராக​வும், நாமக்​கல் சப்​-டிவிஷன் உதவி எஸ்பி ஆகாஷ் ஜோஷி பதவி உயர்வு பெற்று திருப்​பூர் தெற்கு துணை ஆணை​ய​ராக​வும், மதுரை திரு​மங்​கலம் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி அன்​ஷுல் நாகர் பதவி உயர்வு பெற்று திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்​பூர் காங்​கே​யம் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி அர்​பிதா ராஜ்புத் சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்​பி​யாக​வும், திருச்சி திரு​வெறும்​பூர் சப்​-டி​விஷன் உதவி எஸ்பி பனாவத் அரவிந்த் திருச்சி வடக்கு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.