惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
B
Blog
博客园_首页
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
B
Blog RSS Feed
M
MIT News - Artificial intelligence
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
量子位
V
V2EX
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மம்தா பானர்ஜி தோல்வியை ஏற்க வேண்டும்” - மத்திய அமைச்சர் ...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: தேர்தல் தோல்வியை தான் ஏற்கப் போவதில்லை என்றும், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில், அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மம்தா பானர்ஜி தனது தோல்வியை கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது, வாக்குச்சாவடிகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் கூறுவது போன்றவை அவருக்கு பொருத்தமானவை அல்ல. இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர் தவிர்க்க வேண்டும்.

இந்த தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் 20% அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களை தேர்தல் ஆணையம் கூலிக்கு அமர்த்தவில்லை. மக்களின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குமு் அரசியல் கட்சிகளுக்கு சிறந்த எதிர்கலாம் இருக்காது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே தேர்தல் ஆணையம்தான் தேர்தல்களை நடத்தியது. கேரளாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றது என்றும் மேற்கு வங்கத்தில் அது பிரச்சினையை ஏற்படுத்தியது என்றும் சொல்வது ஏற்கத்தக்கதல்ல. ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அமித் ஷாவின் துல்லியமான திட்டமிடலும், முழு கட்சியின் ஒருங்கிணைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். வங்கத்தின் பாஜக தொண்டர்கள் தனித்துவமானவர்கள். இந்த வெற்றியைக் காண்பதற்காக அவர்கள் ஏராளமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். இரண்டு முஸ்லிம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட இந்து தொண்டர்கள் கொல்லப்பட்டனர். எனினும், யாரும் அச்சமடையவில்லை. உணவோ, பாதுகாப்போ இல்லாமல் போராடிய அவர்கள் அனைவரையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

மேற்கு வங்கத்தில் சிற்சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். எங்கள் தொண்டர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாம் திரிணமூல் காங்கிரஸைப் போல மாற வேண்டியதில்லை. மக்கள் அவர்களை விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களைக் கைப்பற்றுவது, எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அப்போது நாங்கள் உங்களுக்கு உதவ மாட்டோம்” என தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 206 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி விரைவில் அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 212 இடங்களைப் பெற்ற திரிணமூல் காங்கிரஸ், இம்முறை 80 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.